மதுரையில் கருணாநிதி-ஜெ நேருக்கு நேர்
சென்னை:
தமிழக உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தை முதல்வர் கருணாநிதி நாளை முதல்தொடங்குகிறார்.
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துவியாழக்கிழமை தனது பிரசாரத்தை நெல்லையில் தொடங்குகிறார்.பாளையங்கோட்டை ஜவஹர் மைதானத்தில் இரவு நடைபெறும் பொதுக் கூட்டத்தில்கருணாநிதி பேசுகிறார்.
இதற்காக இன்றிரவு கருணாநிதி நெல்லை கிளம்புகிறார். இதைத் தொடர்ந்து 6ம் தேதிமதுரையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் மதுரை மத்தியத் தொகுதி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் கவுஸ் பாட்சாவுக்கும், உள்ளாட்சித் தேர்தலில்போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கும் ஓட்டு திரட்டும் வகையில்கருணாநிதி பேசுகிறார்.
இக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்கிறார்கள். வடக்குமாசிவீதி-தெற்குமாசி வீசி சந்திப்பில் இக் கூட்டம் நடக்கிறது.
அதே தினத்தில் மதுரையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் மதுரையில்முற்றுகையிடுகிறார். மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் ராஜன் செல்லப்பா,உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக-மதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாகஅவர் தெற்கு வாசல் சந்திப்பில் இருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார்.
மறு நாள் வடக்குமாசி வீதி-தெற்குமாசி வீதி சந்திப்பில் பொதுக் கூட்டத்திலும்ஜெயலலிதா உரையாற்றுகிறார். இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும்பங்கேற்கிறார்.
இதற்காக நாளை மதுரை செல்லும் ஜெயலலிதா சங்கம் ஹோட்டலில் தங்குகிறார்.அதிமுக தேர்தல் பணிகள் குறித்து கட்சியினருடன் ஆலோசனையும் நடத்துகிறார்.
இந் நிலையில் கருணாநிதியின் பொதுக் கூட்டம் நடக்கும் இடத்துக்கு அருகேஜெயலலிதா பிரச்சாரம் செய்ய போலீசார் அனுமதி தர மறுத்துள்ளனர். ஆனாலும்அதையும் மீறி ஜெயலலிதாவின் பிரச்சாரத்துக்கு அதிமுகவினர் ஏற்பாடுசெய்துள்ளனர்.
அதே போல தேமுதிகவின்மத்தியத் தொகுதி வேட்பாளர் பன்னீர்செல்வத்தை ஆதரித்துவிஜய்காந்தும் நாளை முதல் (5ம் தேதி) பிரச்சாரத்தை தொடங்குகிறார். கடந்த ஒருவாரமாக அவரது மனைவி பிரேமலதா அங்கு தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந் நிலையில் மத்தியத் தொகுதி திமுக வேட்பாளரையும் திமுக கூட்டணிவேட்பாளர்களையும் ஆதரித்து 6ம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர்திருமாவளவனும் பிரச்சாரம் செய்யவுள்ளார். இந்தத் தொகுதியில் 10,000 தலித்மக்களின் வாக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications