ஒண்டிக்கு ஒண்டி! மீண்டும் சீண்டும் விஜயகாந்த்
விருத்தாச்சலம்:
![]() |
திமுகவும், அதிகவும் தனித்துப் போட்டியிடத் தயாரா என்று தேமுதிக தலைவர்விஜயகாந்த் மீண்டும் சவால் விட்டுள்ளார்.
உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தை சென்னையில் தொடங்கிய விஜயகாந்த் தனதுசொந்தத் தொகுதியான விருத்தாச்சலத்தில் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டார். இருப்புஎன்ற கிராமத்தில் தேமுதிக வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து அவர்பேசுகையில்,
நான் மக்களுடன் மட்டும்தான் கூட்டணி வைப்பேன். வேறு யாரோடும் கூட்டணிகிடையாது. இதை நான் கட்சி தொடங்கியபோது சொன்னேன்,. இப்போதும் அதையேசொல்கிறேன்.
சட்டசபைத் தேர்தலில எனது கட்சிக்கு முரசு சின்னத்தை ஒதுக்கினார்கள். ஆனால்உள்ளாட்சித் தேர்தலில் முரசை முடக்கி விட்டார்கள். இந்த சின்னம் 2001தேர்தலின்போது இருந்தது. இப்போது முரசு இல்லை என்கிறார்கள்.
இந்திய அரசியலிலேயே தமிழக அரசியல்தான் படு மோசமாக உள்ளது. குடும்பஅரசியல் நடந்தால் இப்படித்தான் இருக்கும். எனது கட்சி சார்பில் போட்டியிடும்இளைஞர்களை மிரட்டுகிறார்கள் அல்லது விலை பேசுகிறார்கள்.ஏன் அராஜகம் செய்கிறீர்கள்? ஆள் கடத்தல், அடிதடி இதெல்லாம் எதற்காக?எல்லாமே உங்களுக்கு வேண்டும் என்றால் தேர்தலை எதற்கு நடத்துகிறீர்கள்? என்றார்விஜயகாந்த்.
பின்னர் விருத்தாச்சலத்தில் அவர் பேசுகையில், மாறி மாறி கடந்த 20 வருடமாகதமிழகத்தை ஆட்சி செய்தவர்கள், ஓட்டுக் கேட்டு வந்தபோது ஊழலை ஒழிப்போம்,லஞ்சத்தை ஒழிப்போம் என்றனர். என்ன செய்ய முடிந்தது அவர்களால்? ஒருகொசுவைக் கூட ஒழிக்க முடியவில்லை.
சிக்குன்குனியா என்கிறார்கள், இப்போது டெங்குவும் வந்து விட்டது.
நான் புதுக் கட்சிக்காரன். தனியாக போட்டியிடுகிறேன், தைரியமாகபோட்டியிடுகிறேன். நீங்கள் எல்லாம் கட்சி தொடங்கி, 20 வருடம், 50 வருடம்ஆகிறது. ஏன் தனியாக நிற்க பயப்படுகிறீர்கள்? நன்றுதான் பாருங்களேன், அதைமட்டும் செய்ய மாட்டீர்கள்.
ஒரு முறை பாஜகவுடன் கூட்டணி, மறுமுறை காங்கிரஸுடன் கூட்டணி. என்னய்யாஇது?
முரசு ஒலித்தவுடன் தீபம் ஏற்றப்படும். எனவே தீபாவளிக்கு, எல்லோர் வீட்டிலும் தீபஒளி பரவ, தேமுதிக வேட்பாளர்களுக்கு தீபம் சின்னத்தில் வாக்களியுங்கள் என்றார்விஜயகாந்த்.













Click it and Unblock the Notifications