பாஜக-சிவசேனா 22 ஆண்டு கூட்டணி உடைந்தது
மும்பை:
மகாராஷ்டிரத்தில் பாஜக-சிவசேனா இடையிலான 22 ஆண்டுகால கூட்டணிஉடைந்துவிட்டது.
விதர்பா பகுதியில் உள்ள சிமூர் தொகுதி இடைத் தேர்தல் தொடர்பாக இரு கட்சிகள்இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.சிவசேனாவின் முன்னாள் முக்கிய தலைவரான நாராயண ரானே கடந்த ஆண்டுகாங்கிரசில் இணைந்தார். அவரது ஆதரவாளரான விஜய்வாடிவாரும் சமீபத்தில்சிவசேனாவில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்துவிட்டார். தனது எம்எல்ஏபதவியையும் ராஜினாமா செய்தார்.
இதனால் சிமூர் தொகுதியில் இடைத் தேர்தல் நடக்கிறது. இந்த தொகுதியில் யார்போட்டியிடுவது என்பதில் பாஜக-சிவசேனா இடையே தகராறு ஏற்பட்டது.
இந் நிலையில் 12ம் தேதி நடைபெறும் பேரணியில் சிவசேனா வேட்பாளரைஅறிவிக்கப் போவதாக அக்கட்சியின் தலைவர் பால்தாக்கரேவின் மகனும் கட்சியின்செயல் தலைவருமான உத்தவ் தாக்ரே அறிவித்தார்.
அதே நேரத்தில் பாஜவும் வேட்பாளரை அறிவிக்கப் போவதாக கூறியது.
இதையடுத்து பாஜக-சிவசேனா இடையே மோதல் வலுத்தது. நேற்றிரவு பால்தாக்கரேவீட்டில் நடந்த சிவசேனா மூத்த தலைவர்களின் கூட்டத்தில் பாஜவுடன் கூட்டணியைமுறிப்பது என்று ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது. இதன் மூலம் மகாராஷ்டிராவில்22 ஆண்டு கால கூட்டணி உடைந்துவிட்டது.
இதுகுறித்து சிவசேனாவின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ரெளத் கூறுகையில்,கூட்டணி முறிவுக்கு பாஜக தான் காரணம் என்றார்.
பாஜக செய்தித் தொடர்பாளர் நிதின் கூறுகையில், கூட்டணியை சிவசேனாமுறித்ததற்கான அதிகாரபூர்வ தகவல் ஏதும் எங்களுக்கு வரவவில்லை. ஆனால்சிவசேனா ஆதிகரித்தாலும், ஆதரிக்காவிட்டாலும் நாங்கள் சிமூர் தொகுதியில்போட்டியிடுவோம் என்றார்.
இரு கட்சிகளுக்கும் இடையே பிரச்சனை வெடித்தபோதெல்லாம் பால்தாக்கரேவுடன்பேசி சமாதானம் செய்து வந்தவர் பாஜக மூத்த தலைவரான பிரமோத் மகாஜன்.மராட்டியரான அவர் மீது தாக்கரேவும் தனி அன்பு வைத்திருந்தார்.
ஆனால், மகாஜன் மறைவுக்குப் பின் பாஜக தன்னை மதிப்பதில்லை என்று தாக்கரேகருதி வந்தார். இந் நிலையில் கூட்டணியும் உடைந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications