வெற்றிக்காக பில்லி சூனியம்: 2 பேர் கைது
ஸ்ரீபெரும்புதூர்:
உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பில்லி சூனியம் வைத்ததாக வேட்பாளரின் மகன் உள்ளிட்ட 2பேரை போலீஸார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியக் குழு 11வது வார்டில், அதிமுக சார்பில் அமுதா, திமுக சார்பில்வைத்தீஸ்வரி, தேமுதிக சார்பில் ரமேஷ் உள்ளிட்ட 7 பேர் போட்டியிடுகின்றனர்.இந்த வார்டுக்கு உட்பட்ட கிளாய் ஊராட்சி பேருந்து நிலையம் அருகே 2 பேர் பள்ளம் தோண்டி நள்ளிரவில்பூஜை செய்து கொண்டிருந்தனர். இதைப் பார்த்த ஒரு பெண் பயந்து போய் அலறி ஊரைக் கூட்டினார்.
இதையடுத்து ஊர் மக்கள் ஒன்று கூடி பள்ளம் தோண்டி பூஜை செய்து கொண்டிருந்த இருவரையும் பிடித்துவிசாரித்தனர். இருவரும் முரண்பாடாக பேசியதால் மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக தர்ம அடி கொடுத்தனர்.
அடியை தாங்க முடியாத இருவரும் தாங்கள் யார் என்பதை தெரிவித்தனர். அவர்களில் ஒருவர் பெயர் ரமேஷ்,இன்னொருவர் பெயர். சுயேச்சை வேட்பாளர் ரோஜா என்பவரின் மகன் தான் இந்த ரமேஷ், ரோஜாவின் தங்கைகணவர் தான் சுரேஷ்.
தேர்தலில் ரோஜா வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும், மற்ற வேட்பாளர்களுக்கு தோல்வி கிடைக்கவேண்டும் என்றும் வேண்டி, பில்லி சூனியம் வைத்ததாக இருவரும் கிராம மக்களிடம் தெரிவித்தனர்.
இதற்காக அரக்கோணத்தை அடுத்த தக்கோலம் பகுதியைச் சேர்ந்த குமார் என்ற மந்திரவாதியிடம் மந்திரித்தசெப்புத் தகட்டை வாங்கி வந்ததாகவும் தெரிவித்தனர். பின்னர் இருவரையும் போலீஸாரிடம் கிராம மக்கள்ஒப்படைத்தனர். போலீஸார் இருவரையும் கைது செய்தனர்.
பின்னர் இருவரையும் சம்பந்தப்பட்ட இடத்திற்கு அழைத்துச் சென்று புதைத்து வைக்கப்பட்ட செப்புத் தகடுஉள்ளிட்ட பொருட்களை தோண்டியெடுத்தனர். தலைமறைவாகி விட்ட மந்திரவாதி குமாரை போலீஸார் தேடிவருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications