தமிழகத்தில் தொடரும் மழை: கிரிக்கெட் டிரா!
சென்னை:
சென்னையில் நடந்த சாலஞ்சர் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில்மழை குறுக்கிட்டதால் இந்தியா ப்ளூ மற்றும் ரெட் ஆகிய அணிகள் கூட்டாககோப்பையை பகிர்ந்து கொண்டன.
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் ராகுல் டிராவிட்தலைமையிலான இந்தியா ப்ளூ அணியும், வேணுகோபால ராவ் தலைமையிலானஇந்தியா ரெட் அணியும் இறுதிப் போட்டியில் மோதின.முதலில் ஆடிய இந்திய ப்ளூ அணி அபாரமாக விளையாடியது. தொடக்கஆட்டக்காரர் ஷேவாக் அதிரடியாக ஆடி 90 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல்இருந்தார். டிராவிட் 43 ரன்கள் எடுத்தார்.
பதான் 22 ரன்களும், யுவராஜ் சிங் 27 ரன்களும் சேர்த்தனர்.
சச்சின் டெண்டுல்கர் ரன் ஏதும் எடுக்காமல் ஜாகிர்கான் பந்தில் ஆட்டமிழந்தார்.
4 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது.இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
மழை நிற்காமல் தொடர்ந்து பெய்து கொண்டிருந்ததால் ஆட்டத்தைக் கைவிடநடுவர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து இரு அணிகளுக்கும் கூட்டாக கோப்பைவழங்கப்பட்டது.
இன்றும் பெய்யும் மழை:
இந் நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் இன்றும் கன மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் கூறியுள்ளது.
கோடை காலம் முடிந்தும் கூட கடந்த பல நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் கடும் வெயில் அடித்து வந்தது. இந்த நிலை கடந்த சில நாட்களாகமாறியுள்ளது. தினமும் இரவு கன மழை பெய்து வருகிறது. இடியுடன் கூடிய மழை பெய்து வருவதால் வெப்பம் வெகுவாக குறைந்துள்ளது.
வருகிற 20ம் தேதி வட கிழக்குப் பருவ மழை தொடங்கவுள்ளதால்தான் இந்த திடீர் மழையும், இடியும் என வானிலை ஆராய்ச்சி நிலையம்தெரிவித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் சென்னை நகரில் 3 நாட்களாக இடியுடன் கூடிய கன மழை பெய்துள்ளது.
நேற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. குறிப்பாக சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் கன மழை பெய்தது. இரவு முழுவதும்விடிய விடிய விட்டு விட்டு கன மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டோடியது.
இன்றும் தமிழகத்தில் மழை பெய்யும் என நுங்கம்பாக்கம் வானிலை ஆராய்ச்சி நிலையம் கூறியுள்ளது.
திரும்பி வந்த அந்தமான் விமானம்:
இதற்கிடையே சென்னையில் இருந்து 119 பயணிகளுடன் இன்று காலை 7.45 மணிக்கு அந்தமான் தலைநகர் போர்ட் பிளேர் சென்ற இந்தியன் ஏர்லைன்சின்அலையன்ஸ் ஏர் விமானம் அங்கு மிக கனத்த மழை பெய்ததால் தரையிறங்க முடியாமல் சென்னைக்கே திரும்பி வந்துவிட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications