கேப்டனுக்கு தேர்தல் ஆணையர் கடும் எச்சரிக்கை
சென்னை:
முரசு சின்னம் கிடைக்காததற்கு தேர்தல் ஆணையர்தான் காரணம் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொடர்ந்துபேசி வந்தால் அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையர் சந்திரசேகரன்எச்சரித்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலுக்கான சின்னப் பட்டியலில் முரசு சின்னம் இல்லை. இதனால் உள்ளாட்சித் தேர்தலில்தேமுதிகவுக்கு முரசு சின்னம் கிடைக்கவில்லை.முதல்வர் கருணாநிதியின் தலையீடு காரணமாகவே, தேர்தல் ஆணையர் தனது கட்சிக்கு முரசு சின்னம்கிடைக்கவிடாமல் சதி செய்து விட்டதாக குற்றம் சாட்டி வருகிறார் விஜயகாந்த்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் சந்திரசேகரன் பேசுகையில்,
சென்னையில் நடந்த பொதுக் கூட்டத்தில் என்னைப் பற்றி அவதூறாக பேசியுள்ளார் விஜயகாந்த். தமிழகத்தில்தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் 4 மட்டுமே. பதிவு செய்யப்பட்டு,அங்கீகரிக்கப்படாத கட்சிகள் மொத்தம் 127.
இந்த 127 கட்சிகளின் வேட்பாளர்களும் 3 சின்னங்களைக் கோரலாம். அதில் முன்னுரிமை அடிப்படையில்சின்னம் ஒதுக்கப்படும். விஜயகாந்த் கட்சியினர் கோரிய முரசு சின்னம் மாநில தேர்தல் ஆணையத்தின் சின்னப்பட்டியலிலேயே இல்லை. இல்லாத சின்னத்தை எப்படி ஒதுக்க முடியும்?
சின்ன ஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பை அளித்துள்ளது. முரசு சின்னம் அளிக்காததுகுறித்து விஜயகாந்த் பேசி வருவது உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதிப்பது போல உள்ளது.
எனவே விஜயகாந்த் இவ்வாறு அவதூறாக பேசுவதை நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் அவர் மீது சட்டப்பூர்வநடவடிக்கை எடுக்கப்படும்.
தேர்தல் முடிவுகள் வெளியான ஒரு மாதத்திற்குள் வேட்பாளர்கள் செலவுக் கணக்கு விவரங்களை சம்பந்தப்பட்டதேர்தல் அதிகாரிகளிடம் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைஎடுக்கப்படும். 3 ஆண்டுகளுக்கு அவர்களால் தேர்தலில போட்டியிட முடியாது.
மதுரை மத்திய தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுவதால் அத்தொகுதியில் அக்டோபர் 9ம் தேதி மாலை 5மணி முதல் 11ம் தேதி மாலை 5 மணி வரை உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரசாரம் மேற்கொள்ள முடியாது.
கிராமப்புறங்களில் வாக்காளர்கள் அதிகம் உள்ளன. அங்கு மட்டும் 10.70 கோடி வாக்குச் சீட்டுக்கள்அச்சடிக்கப்பட்டுள்ளன. நகர்ப்புறங்களில் 1.96 கோடி வாக்குச் சீட்டுக்கள் அச்சிடப்பட்டு வருகின்றன என்றார்சந்திரசேகரன்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications