தண்ணி பார்ட்டியில் பெண் அமைச்சர்

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்:

Central Minister Selja

காந்தி ஜெயந்தி தினத்தன்று விதியை மீறி நடந்த மது விருந்தில் மத்திய அமைச்சர் ஷெல்ஜாவும் பங்கேற்றுள்ளகாந்திஜிக்கு அவமரியாதை ஏற்படுத்தியுள்ளார். எனவே அவர் பதவியிலிருந்து தூக்கப்பட வேண்டும் என்றுஇந்திய தேசிய லோக்தள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து லோக்தள் கட்சியின் தலைவர் அசோக் அரோரா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

காந்தி ஜெயந்தியன்று பஞ்சாப் மாநிலம் அம்பாலா அருகே உள்ள மலைவாசஸ்தலத்தில் நடந்த திருமணநிகழ்ச்சியில் விதியை மீறி பகிரங்கமாக மது பரிமாறப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறைஇணையமைச்சர் ஷெல்ஜா கலந்து கொண்டுள்ளார்.

இதன் மூலம் சட்டத்தை மீறி விட்டார் ஷெல்ஜா. எனவே இதற்கு தார்மீகப் பொறுப்பேற்று அவர் தனது அமைச்சர்பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

இச் சம்பவம் மூலம் மகாத்மா காந்திக்கு பெரும் அவமதிப்பு ஏற்பட்டுள்ளது. இனியும் ஷெல்ஜா அமைச்சர்பதவியில் நீடிக்க உரிமை இல்லை.

இதேபோல ஹரியானா முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவின் ஆலோசகர்களில் ஒருவரும் காந்தி ஜெயந்திதினத்தன்று தனது வீட்டில் மது விருந்து அளித்துள்ளார். அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகோரியுள்ளார் அரோரா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+