ஃபேப் சிட்டி: ப.சிதம்பரம்-தயாநிதி மோதல்
டெல்லி:
ஹைதராபாத்தில் பல நூறு கோடி மதிப்பில் தொடங்கப்பட்டுள்ள ஃபேப் சிட்டிதிட்டத்தை முடக்கும் வகையில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் செயல்படுவதாகபுகார் கூறி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தகவல் தொட ர்புத் துறை அமைச்சர்தயாநிதி மாறன் கடிதம் எழுதியுள்ளார்.
ஆந்திர மாநில தலைநகர் ஹைதராபாத்தில் பல நூறு கோடி முதலீட்டில் ஃபேப் சிட்டிஎன்ற கம்ப்யூட்டர் சிப் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.இந்த நிறுவனத்தின் மூலம் 3 பில்லியன் டாலர் அன்னிய முதலீடு வரும் எனஎதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 10.5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பும்கிடைக்கும்.
இந்த நிறுவனத்தை தங்கள் மாநிலத்துக்கு இழுக்க கர்நாடகமும் ஆந்திராவும் தீவிரமாகமோதின. அதிமுக ஆட்சியில் தமிழகம் அசமந்தமாக இருந்துவிட்டது. இறுதியில்ஆந்திராவை தேர்வு செய்தது இந்த நிறுவனம்.
இப்போது இத்திட்டம் தற்போது பல்வேறு தடைகளை சந்தித்துள்ளது. இதற்குப.சிதம்பரம்தான் காரணம் என தயாநிதி மாறன் குற்றம் சாட்டி பிரதமருக்கு கடிதம்எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமருக்கு தயாநிதி மாறன் எழுதியுள்ள கடிதத்தில், நிதியமைச்சர்ப.சிதம்பரம் தன்னிச்சையாக செயல்படுகிறார். அவரது போக்கு சரியில்லை. அதைசரிப்படுத்த வேண்டியது உங்களது கடமை. ப.சிதம்பரத்தின் போக்கால் ஃபேப் சிட்டிதிட்டம் மடங்கி விடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இத்திட்டத்தை தனது கனவுத் திட்டமாக பட்ஜெட் உரையில் ப.சிதம்பரம்தெரிவித்திருந்தார். ஆனால் இப்போது அவர் பின்வாங்குவது போலத் தெரிகிறது.
இத்திட்டம் தொடர்பாக கடந்த ஜூலை மாதத்திலும், பின்னர் செப்டம்பர் மாதம் 27ம்தேதியும் இருமுறை ப.சிதம்பரத்திற்கு கடிதம் எழுதினேன். ஆனால் அவர் பதிலேஅளிக்கவில்லை.
இந்தத் திட்டத்திற்கான ஊக்க உதவிகளை அறிவிப்பதில் நிதியமைச்சகம்தேவையில்லாமல் தாமதம் செய்கிறது. இந்த முக்கிய திட்டம் தொடர்பாக கொள்கைமுடிவு எதையும் எடுக்காமல் உள்ளது நிதியமைச்சகம்.
இதுபோல முக்கியமான திட்டங்களில் நிதியமைச்சகம் அலட்சியம் காட்டினால், நமதுநாட்டுக்கு வர வேண்டிய மிகப் பெரிய டெக்னாலஜி துறை முதலீடுகள், திட்டங்கள்வேறு நாடுகளுக்குப் போய் விடும் அபாயம் உள்ளது.
இத்திட்டத்தின் 26 சதவீத பங்குகளை அரசே வைத்துக் கொள்ள வேண்டும் என எனதுஅமைச்சகம் நிதியமைச்சகத்திடம் கோரியது. ஆனால் 15 சதவீதத்திற்கு மேலானபங்குகள் அரசு வசம் இருக்கக் கூடாது என நிதியமைச்சகம் கண்டிப்பாகதெரிவித்துள்ளது.
இந்தப் பிரச்சினையில் தாங்களே நேரடிாயக தலையிட்டு, ப.சிதம்பரத்திற்குஉத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் தயாநிதி மாறன்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications