பிரதமர் பேரன்களையும் விடாத டெங்கு!
டெல்லி:
பிரதமர் மன்மோகன் சிங்கின் இரண்டு பேரன்களும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு டெல்லிமருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
டெல்லி மற்றும் வட மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் படு வேகமாக பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்தமுடியாமல் சுகாதாரத் துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர்.டெங்கு காய்ச்சலுக்கு டெல்லியில் மட்டும் இதுவரை 15 பேர் இறந்துள்ளனர். நாடு முழுவதும் 37 பேர்உயிரிழந்துள்ளனர். மேலும் இந்தியா முழுவதும் 600 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
டெங்குவுக்கு டெல்லிதான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. டெங்குவுக்கு இறந்தவர்களில் 15 பேர் டெல்லியைச்சேர்ந்தவர்கள். மற்றவர்கள் உ.பி, ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
இந் நிலையில் டெங்கு, பிரதமர் மன்மோகன் சிங்கின் பேரன்களையும் விடவில்லை. மன்மோகன் சிங்கின் 2வதுமகள் தமான். இவரது கணவர் அசோக் பட்நாயக். ஐ.ஏ.எஸ். அதிகாரி. இவர்களுக்கு ரோஹன் (வயது 11), மாதவ்(17) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.
இவர்கள் இருவரையும் டெங்கு தாக்கியுள்ளது. இதையடுத்து உடனடியாக இருவரும் டெல்லி அகில இந்தியமருத்துவ விஞ்ஞானக் கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில்இருவருக்கும் டெங்கு காய்ச்சல் வந்துள்ளது உறுதியானது.
இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருவரும் தேறி வருவதாக டாக்டர்கள்தெரிவித்துள்ளனர். பிரதமர் இல்லம் வரை டெங்கு வந்து விட்டதால் டெல்லியில் டெங்கு பீதி மேலும்அதிகரித்துள்ளது.
பிரதமர் வீடு உள்பட டெல்லி முழுவதும் கொசு மருந்து அடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications