மதுரையில் திமுக-அதிமுகவினர் உருட்டுக் கட்டைபைட்-ராஜன் செல்லப்பா உள்பட பலர் காயம்
மதுரை:
மதுரையில் திமுகவினருக்கும் அதிமுகவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் மத்திய தொகுதி அதிமுகவேட்பாளர் ராஜன் செல்லப்பா உள்பட இரு தரப்பையும் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
ராஜன் செல்லப்பாவின் காரும் உடைக்கப்பட்டது.மதுரை மத்திய தொகுதிக்கு 11ம் தேதி தேர்தல் நடக்கிறது. வாக்குப் பதிவுக்கு 5 நாட்களே உள்ள நிலையில்அதிமுக, திமுக, தேமுதிக கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந் நிலையில் சில நாட்களுக்கு முன் ஒரு திருமண மண்டபத்தில் வைத்து வாக்காளர்களுக்கு திமுகவினர் பணம்கொடுப்பதாக தகவல் வந்தது. அதே போல அதிமுகவினரும் வீடு வீடாகச் சென்று பணம் கொடுப்பதாகக்கூறப்பட்டது.
இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது.
இந் நிலையில் இன்று காலை சின்னக்கடை வீதி பகுதியில் திமுகவினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில்அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா 4 கார்களில் அங்கு சென்றார்.
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறீர்களா என்று திமுகவினரிடம் கேட்டார். இதையடுத்து திமுக,அதிமுகவினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ராஜன் செல்லப்பாவுடன் வந்த கார்களில் வந்தவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் தயாராக வந்திருந்தனர்.இதையடுத்து திமுகவினரை அவர்கள் உருட்டுக் கட்டைகளால் தாக்கினர். சரமாரியாக அடி வாங்கிய திமுகவினர்அங்கிருந்து தப்பியோடினர்.
செல்போன்கள் மூலம் தங்கள் ஆட்களுக்குத் தகவல் தந்தனர். இதையடுத்து ஏராளமான திமுகவினர் அங்குஉருட்டுக் கட்டைகளுடன் வந்து குவிந்து அதிமுகவினரை பதிலுகுக்கு தாக்க ஆரம்பித்தனர்.
இரு தரப்பினரும் சரமாரியாக தாக்கிக் கொண்டதில் பலருக்கு மண்டை உடைந்தது. ராஜன் செல்லப்பாவின்காரையும் அவரது பிரச்சார ஜீப்பையும் திமுகவினர் தாக்கி உடைத்தனர். ராஜன் செல்லப்பாவுக்கும் உருட்டுக்கட்டை அடி விழுந்தது.
மண்டை உடைந்து, சட்டை வேட்டி கிழிந்த நிலையிலும் திமுக, அதிமுகவினர் மிக பயங்கரமாகத் தாக்கிக்கொண்டனர். கூடவே அருகில் இருந்த கடைகளையும் இரு தரப்பினரும் சூறையாடினர்.
சண்டை உச்ச கட்டத்தை அடைந்த நிலையில் போலீசார் ஓடி வந்து இரு தரப்பினரையும் அமைதிப்படுத்தினர்.
இதையடுத்து திமுகவினர் மீது விளக்குத்தூண் காவல் நிலையத்தில் அதிமுகவினர் புகார் தந்தனர். அதைபோலீசார் வாங்க மறுக்கவே பெரியார் பஸ் நிலையம் எதிரே அதிமுகவினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதில் ராஜன் செல்லப்பா, மாஜி மந்திரி நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தேர்தல் நேரத்தில் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருந்தால்ஓட்டுக்கள் பாதிக்கும் என சில அதிமுகவினர் ராஜன் செல்லப்பாவிடம் எடுத்துக் கூறினர். இதையடுத்து போலீஸ்கமிஷ்னர் அலுவலகத்துக்கு ஊர்வலமாகச் சென்று அவர்கள் புகார் மனு கொடுத்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications