தமிழகத்திலும் பரவுகிறது டெங்கு!

Subscribe to Oneindia Tamil

வேலூர்:

டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களை உலுக்கி வரும் டெங்கு காய்ச்சல் தற்போதுதமிழகத்திலும் பரவி ஆரம்பித்துள்ளது. வேலூரில் டெங்கு காய்ச்சலுக்கு 10க்கும்மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிக்குன் குனியாவால் தடுமாறி வரும் தமிழகத்தில் டெங்கு காய்ச்சலும் பரவி வருவதுபெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூரில் 10 பேரை டெங்கு காய்ச்சல் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த பத்துபேரும் வேலூர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகினறனர்.

இதேபோல சென்னை அரசு பொது மருத்துவனையிலும் ஏராளமான பேர் டெங்குமற்றும் சிக்குன் குனியாவுக்கான மருந்துகளை வாங்க அலை மோதி வருகின்றனர்.மேலும் சில தனியார் மருத்துவனைகளிலும் டெங்கு காய்ச்சலுக்கு பலர் சிகிச்சைபெற்றுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

சிக்குன்குனியாவால் தமிழகம் ழுவதும் கடந்த சில மாதங்களாக அல்லாடிக்கொண்டுள்ளது. இந்த நோய் செப்டம்பர் மாத இறுதிக்குள் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிடும் என தமிழக அரசு கூறியபோதிலும் இதுவரை சிக்குன் குனியா போனபாடிலில்லை. இந் நிலையில் டெங்குவும் வந்து விட்டதால் மக்களிடையே பெரும்அச்சம் பரவியுள்ளது.

இதற்கிடையே, கேரள மாநிலத்தில் சிக்குன்குனியாவுக்கு பலர் பலியாகியுள்ளதாகஅம்மாநில அரசு அறிவித்திருந்தது. சிக்குன்குனியாவைக் கட்டுப்படுத்த உலக சுகாதாரஅமைப்பின் உதவியை தற்போது கேரள அரசு நாடியுள்ளது.

இதைத் தொடர்ந்து அமெரிக்காவிலிருந்து உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகள்கேரளாவுக்கு வந்துள்ளனர்.

சிக்குன்குனியா பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று அதன் பாதிப்புகளையும்,கட்டுப்படுத்தும் நடவடிக்கை குறித்தும் அவர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.தேவைப்படும் பட்சத்தில் சிக்குன்குனியாவை ஒழிக்க கேரள அரசுக்கு, உலக சுகாதாரஅமைப்பு நிதியுதவியும் செய்யக் கூடும் எனத் தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+