தப்பிக்கும் ஜெயமாலா, உன்னிகிருஷ்ண பணிக்கர்
கொச்சி:
![]() |
சபரிமலை கோவிலில் நடிகை ஜெயமாலா நுழைந்தது தொடர்பாக விசாரணை நடத்தத்தேவையில்லை என்று கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சபரிமலை கோவிலில் புதிதாக தேவ பிரசன்னம் பார்க்க உத்தரவிட வேண்டும், நடிகைஜெயமாலா சபரிமலை கருவறைக்குள் நுழைந்தது தொடர்பாக லஞ்ச ஒழிப்புப்போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி பந்தளம் அரண்மணைஜோதிடர் ஜெயக்குமார் உள்ளிட்ட 6 பேர் கேரள உயர்நீதிமன்றத்தில் தனித்தனியாகவழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்குகளை ஒன்றாக சேர்த்து விசாரித்த தலைமை நீதிபதி வி.கே.பாலி, நீதிபதிராமச்சந்திரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்த கோரிக்கையை நிராகரித்துதீர்ப்பளித்தது.
இதுதொடர்பாக நீதிபதிகள் அளித்த தீர்ப்பு:
![]() |
திருவாங்கூர் தேவஸ்தானம் தொடர்பான செய்திகள்பு நடத்திய (உண்ணி கிருஷ்ணபணிக்கர் பார்த்த) தேவபிரசன்னத்தில் முறைகேடு நடந்ததாக கூற முடியாது.
அதேபோல கோவில் கருவறைக்குள் நடிகை நுழைந்ததாக கூறப்படுவது குறித்து லஞ்சஒழிப்புப் போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட வேண்டிய அவசியம் இல்லை. அந்தப்பிரச்சினையை சரி செய்ய (பரிகாரம்) தேவையான நடவடிக்கைகளை தேவஸ்தானமேமேற்கொள்ள முடியும்.
இதேபோல சபரிமலை கோவில் நிர்வாகத்தை கவனிக்க தனியாக ஒரு அமைப்பைஉருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரிக்கிறது.தற்போதைய திருவாங்கூர் தேவஸ்தான நிர்வாகத்தில் எந்தவித குறைபாடும்இருப்பதாக நீதிமன்றம் கருதவில்லை.
சபரிமலை தந்திரி சொல்லித்தான் தேவ பிரசன்னம் பார்க்கப்பட்டதாக திருவாங்கூர்தேவஸ்தானம் கூறுகிறது. அதற்கான ஆதாரங்களையும் அது சமர்ப்பித்துள்ளது.எனவே தேவ பிரசன்னம் பார்த்த விவகாரத்தில் தந்திரியின் பங்கு குறித்து தீவிரமாகஆய்வு செய்யப்பட வேண்டும். அவரது அதிகாரம் குறித்தும் ஆய்வு செய்யப்படவேண்டும்.சுவாமி ஐயப்பனின் பரம்பரை நகைகள் பந்தளம் ராஜ வம்சத்தினரிடம் தான் இருக்கவேண்டும். அதை அரசு வசம் ஒப்படைக்க முடியாது என்று நீதிபதிகள் தங்களதுதீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தீர்ப்பினால் இந்த விவகாரத்தில் ஜெயமாலா, பணிக்கர் ஆகியோர் மீது புதியவழக்குகள் ஏதும் பதிவு செய்யப்பட மாட்டாது என்று தெரிகிறது. மேலும்அவர்களிடம் போலீஸ் விசாரணை நடத்தவும் வாய்ப்பில்லை.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!














Click it and Unblock the Notifications