அப்சல் தூக்கு தண்டனை ஏற்பாடுகள் நிறுத்தி வைப்பு
டெல்லி:
![]() |
நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அப்சல் குருவைத் தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகளைதிகார் சிறை நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளது.
நாடாளுமன்றம் மீதான தீவிரவாதத் தாக்குதல் வழக்கில் முகம்மது அப்சல் குருவுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.அவரை வருகிற 20ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட ஏற்பாடுகள் நடந்து வந்தன.
இந் நிலையில் அப்சலின் மனைவி தபஸ்ஸம் தனது கணவருக்கு கருணை காட்ட வேண்டும் என்று கோரி ஜனாதிபதி கலாமிடம்விண்ணப்பித்துள்ளார். கலாமை நேரில் சந்தித்தும் கோரிக்கை விடுத்தார்.
இந்த கருணை மனுவை மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனைக்கு கலாம் அனுப்பி வைத்துள்ளார். சிறை விதிகளின்படி,கருணை மனு தாக்கல் செய்யப்பட்ட பின்னர் அதன் மீது குடியரசுத் தலைவர் முடிவு எடுக்கும் வரை தூக்கிலிட முடியாது.
எனவே அப்சலை தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகளை திகார் சிறை நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளது. இதுகுறித்து திகார் சிறைஅதிகாரிகள் கூறுகையில், அப்சல் குருவின் கருணை மனு குடியரசுத் தலைவரின் பரிசீலனையில் உள்ளதாக அறிகிறோம். எனவேதூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்றார்.
முன்னதாக கலாமை அப்சலின் மனைவி, தாயார் ஆயிஷா பேகம், மகன் காலிப் ஆகியோர் சந்தித்து கருணைகாட்ட வேண்டும் என்று நேரில் கோரிக்கை விடுத்தனர். சுமார் 20 நிமிடம் இந்த சந்திப்பு நடந்தது.பின்னர் தபஸ்ஸம் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாங்கள் கொடுத்துள்ள கருணை மனுவை பரிசீலிப்பதாககுடியரசுத் தலைவர் உறுதி கூறினார். எனது கணவர் மன்னிக்கப்படுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றில் அவருக்கு நீதி கிடைக்காத நிலையில், இந்த அமைப்பின் மீதும்(குடியரசுத் தலைவர்) அவர் நம்பிக்கையை இழந்து விட்டார். இதனால்தான் அவரே கருணை மனுவைத் தாக்கல்செய்யவில்லை.
விசாரணை பாரபட்சமாக நடந்துள்ளது, நியாயமாக நடைபெறவில்லை என்பதையும் குடியரசுத் தலைவரிடம்கூறியுள்ளோம். இந்தியாவை பெரிய ஜனநாயக நாடு என்கிறோம். ஆனால் காஷ்மீரிகளுக்கு மட்டும் நீதிகிடைப்பது இல்லை என்றார் தபஸ்ஸம்.
அதுகுறித்து விரிவாக சொல்லுங்கள் என செய்தியாளர்கள் கேட்டபோது, அதற்கு மேல் பேச விரும்பவில்லைஎன்று கூறி விட்டு தபஸ்ஸம் அங்கிருந்து நகர்ந்து விட்டார்.
அப்சலின் மகன் காலிப்பிடம், நீ எதிர்காலத்தில் என்னவாக வர விரும்புகிறாய் என்று கலாம் கேட்டுள்ளார்.அதற்கு காலிப், தான் டாக்டராக விரும்புவதாகவும், ஆனால் அதற்கு தனது தந்தை உயிருடன் இருந்தால்தான்முடியும் என்றும் கூறியதாக அப்சலின் வழக்கறிஞர் நந்திதா ஹக்ஸர் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications