இலவசமாக தர போதிய நிலமில்லை-கருணாநிதி
சென்னை:
அதிமுக அரசின் பட்ஜெட் உரையில் தரிசு நிலங்கள் குறித்து கூறப்பட்டிருந்த புள்ளி விவரங்களை உண்மை எனநம்பி இலவச நிலத் திட்டத்தை அறிவித்து, பின்னர் அவை பொய் என அறிந்து ஏமாந்தோம். இத்திட்டத்திற்குபோதிய நிலம் இல்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
ஜனநிாயக முற்போக்குக் கூட்டணியின் உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தை கருணாநிதி நெல்லையில்தொடங்கினார். பாளையங்கோட்டை ஜவஹர் மைதானத்தில் நடந்த மிக பிரமாண்டமான பொதுக் கூட்டத்தில்கருணாநிதி பேசுகையில்,திமுகவும், கூட்டணிக் கட்சிகளும் இணைந்து ஒரு சர்வாதிகார ஆட்சியை அகற்றியுள்ளோம்.
2001 சட்டசபைத் தேர்தலின்போதும், அதன் பின்னர் ஆளுநர் உரையிலும் கூட்டுறவுத் தேர்தலை நடத்துவோம்என அதிமுக வாக்குறுதி அளித்தது, இதேபோல மேலும் பல வாக்குறுதிகளையும் அள்ளி வீசியது. ஆனால்எதுவுமே நிறைவேற்றப்படவில்லை.
ஏழை விவசாய குடும்பத்திற்குத் தலா 2 ஏக்கர் நிலம் வழங்கும் திட்டத்தை அதிமுகவின் பட்ஜெட் அறிக்கையில்இருந்த புள்ளி விவரத்தைப் பார்த்துத்தான் அறிவித்தோம். அதில் தமிழ்நாட்டில் 50 லட்சம் ஏக்கர் தரிசு நிலம்இருப்பதாக கூறப்பட்டிருந்தது. அதை அப்போது எதிர்க்கட்சியாக இருந்த நாங்கள் ஏற்று, உண்மை என்று நம்பிஇத்திட்டத்தை அறிவித்தோம்.
ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னர்தான் அவ்வளவு தரிசு நிலம் இல்லை எனத் தெரிய வந்தது. எனினும், இருக்கிறநிலத்தை கொடுப்போம் எனத் திட்டமிட்டு முதல் கட்டமாக 26,000 பேருக்கு வழங்கியுள்ளோம். இத்திட்டம்தொடர்ந்து அமல்படுத்தப்படும்.
அதையெல்லாம் சிந்தித்துப் பார்த்து நாங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை பாராட்டி இருக்க வேண்டும்.மனம் இல்லை என்றால் பரிகாசம் செய்யாமலாவது இருக்கலாம். இப்படி பரிகாசம் செய்தால் இப்போதுஉங்களுக்கு (அதிமுகவுக்கு) கிடைத்திருப்பது (எம்எல்ஏக்கள்) கூட எதிர்காலத்தில் கிடைக்காது.
இதேபோல, 2 கிலோ அரிசி, சத்துணவில் வாரம் 2 முட்டைகள் ஆகியவற்றையும் நிறைவேற்றியுள்ளோம். இலவசடிவி திட்டத்தை கேலி செய்தனர். இதுவரை 30,000 டிவி பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. 4 மாதங்களில்இத்தனையும் நடந்துள்ளது. அதை தொடர்ந்தும் வழங்குவோம்.
நான் உங்களில் ஒருவன். உங்கள் உயிரில், உடலில், ரத்தத்தில் கலந்திருக்கிறேன். எல்லாவற்றையும் செய்துவிட்டேன் என நான் கூற மாட்டேன். இன்னும் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் உள்ளன. அந்தப் பணிகளைதொடர்ந்து செய்யத்தான் மீண்டும் ஒரு வாய்ப்பு கேட்கிறேன்.
தமிழகத்தில் தற்போது உள்ள நல்லாட்சி போலவும், மத்தியிலும், மாநிலத்திலும் இணக்கமாக உள்ள அரசைப்போலவும், உள்ளாட்சி அமைப்புகள் இருக்க ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்றார்கருணாநிதி.
கூட்டத்தில் நெல்லை மாவட்ட திமுக சார்பில் கருணாநிதிக்கு 55 பவுன் தங்கச் சங்கிலியை பரிசாக அளித்தார்மாவட்ட பொறுப்பாளரும், எம்.எல்.ஏவுமான கருப்பசாமி பாண்டியன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications