தேர்தல்: சென்னையில் 400 ரெளடிகள் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
உள்ளாட்சி தேர்தலில் வன்முறையை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை நகர் முழுவதும் 400ரெளடிகள் மற்றும் கட்சி பிரமுகர்களை போலீசார் நள்ளிரவில் கைது செய்தனர்.உள்ளாட்சி தேர்தலில் வன்முறையை தடுக்க வட சென்னையில் 60 ரெளடிகள், 65 கட்சி பிரமுகர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
தென் சென்னையில் 50 ரெளடிகள் உள்பட 100 பேரும், மத்திய சென்னை பகுதியில் 20 ரெளடிகள் உள்பட 189பேரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்களை நேற்று நள்ளிரவு வீடுகளில் குந்து போலீசார் கைது செய்தனர். இதுவரை சென்னையில் மட்டும் 1,000பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதேபோல தமிழகம் முழுவதும் கைதுகள் நடந்து வருகின்றன.












Click it and Unblock the Notifications