ஜெ-வைகோ கூட்டத்துக்கு இடச் சிக்கல்
கோவை:
முதல்வர் கருணாநிதி 10ம் தேதி கோவையில் உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.
அதே போல அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா 11ம் தேதி கோவை வருகிறார். அவரும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் ஒரே மேடையில் பிரசாரம் செய்கின்றனர்.தமிழக உள்ளாட்சி தேர்தல் 13, 15 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இதையடுத்து தலைவர்கள் சூறாவளிபிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கருணாநிதியும் ஜெயலலிதாவும் மதுரையை முற்றுகையிட்டு திக்குமுக்காட வைத்தனர். நேற்றிரவு மதுரை பொதுக்கூட்டத்தில் கருணாநிதி உரையாற்றினார். ஜெயலலிதா வீதி வீதியாக பிரச்சாரம் செய்தார். இன்று மதுரையில்பொதுக் கூட்டத்தில் ஜெயலலிதா பேசுகிறார்.
இந் நிலையில் நாளை முதல் அடுத்தடுத்த நாட்களில் நெல்லை, சேலம், சென்னை, கோவை, திருச்சியில்ஜெயலலிதாவும் வைகோவும் பங்கேற்கும் பொதுக் கூட்டங்கள் நடக்கின்றன.
11ம் தேதி ஜெயலலிதா, வைகோ இருவரும் கோவை வருகின்றனர். ஜெயலலிதாவும், வைகோவும் ஒரேமேடையில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளனர். ஆனால், அவர்களுக்கு பிரசார மேடைக்கான இடம்கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 11ம் தேதி மாலை 5 மணிக்கு பிரசாரத்தை நிறைவு செய்ய வேண்டியகட்டாயம் உள்ளதால் பகல் நேரத்தில் பொதுக் கூட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பகல் 1 மணிக்கு கூட்டத்தை நடத்த இடத்தை தேர்வு செய்வது குறித்து கோவை மாவட்ட செயலாளர் வேலுச்சாமிதலைமையில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
வழக்கமா அரசியல் கட்சிகள் கூட்டம் நடக்கும் கோவை வ.உ.சி. திடலில் இப்போது தனியார் பொருட்காட்சிநடந்து வருகிறது. இதனால் அங்கு எந்த கட்சியினரும் பொதுக்கூட்டம் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், 10ம் தேதி முதல்வர் கருணாநிதியின் பொதுக் கூட்டம் சிவானந்தா காலனியில் நடக்கிறது. அதேஇடத்தில் அதிமுகவும் அடுத்த நாள் கூட்டம் போட முதலில் முடிவு செய்யப்பட்டது.
ஆனால், 10ம் தேதி இரவில் திமுக கூட்டம் முடிந்த பின் மறுநாள் பகல் 1 மணிக்குள் அதே இடத்தைஜெயலலிதாவுக்காக ஏற்பாடு செய்ய வேண்டும். இதில் சிக்கல் வரலாம் என்பதால் வி.கே.கே.மேனன் ரோட்டில்பொதுக் கூட்டம் நடத்த அதிமுகவினர் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
ஆனால், பகலில் கூட்டம் போட்டால் கூட்டம் வராதே என்ற கவலையும் அதிமுக, மதிமுகவினர் மத்தியில்நிலவுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications