தீபாவளி: பட்டாசு வெடிக்க 15 கட்டுப்பாடுகள்
சென்னை:
சென்னை நகரில் தீபாவளிப் பண்டிகையின்போது பட்டாசுகளை வெடிப்பதற்கு 15 கட்டுப்பாடு பிளஸ்அறிவுரைகளை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக காவல்துறை ஆணையர் லத்திகா சரண் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:1. உச்சநீமன்ற உத்தரவுக்கு இணங்க காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பட்டாசுகளைவெடிக்கலாம். சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதி 89ன்படி வெடிக்கும் இடத்திலிருந்து 4 மீட்டருக்கு அப்பால் 125டெசிபல் அளவுக்கு மேல் சப்தம் எழுப்பக் கூடிய பட்டாசுகளை தயாரிக்கவோ, விற்கவோ, இருப்பு வைக்கவோகூடாது.
2. எளிதில் தீப்பிடிக்க் கூடிய பொருட்கள் உள்ள இடத்தில் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம். மோட்டார்சைக்கிள்கள், ஸ்கூட்டர் நிறுத்தும் இடங்கள், பெட்ரோல் நிலையங்கள் அருகிலும் வெடிக்கக் கூடாது.
3. பட்டாசுகளை கொளுத்தி மேலே தூக்கி எறிந்து விட்டு வேடிக்கை பார்க்க முயற்சித்தால் வெடிக்கும் பட்டாசுஅருகில் இருப்பவர்கள் மீது விழுந்து உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.
4. மக்கள் நடமாடும் இடத்தில் கவனக்குறைவாக பட்டாசுகளை வெடிக்காதீர்கள்.
5. பட்டாசுகளை வெடிக்கும்போது தகர டப்பாக்களை மூடி வேடிக்கை பார்த்தால், வெடியினால் டப்பா தூக்கிஎறியப்படலாம். அதனால் பல விபத்துக்கள் நேரிடும்.
6. எரியும் விளக்கு அருகில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.
7. ஈரமுள்ள பட்டாசுகளை அடுப்படியில் வைத்து உலர்த்தக் கூடாது.
8. குடிசைப் பகுதிகளிலும் மாடிக் கட்டடங்கள் அருகிலும் ராக்கெட் போன்ற வெடிகளை வெடிக்கக் கூடாது.
9. எக்காரணத்தைக் கொண்டும் குடிசைகளின் பக்கத்திலோ, ஓலைக் கூரைகள் உள்ள இடங்கள் அருகிலோ வாணவெடிகளையோ அல்லது பட்டாசுகளையோ கொளுத்துவத்ை தவிர்க்க வேண்டும்.
10. பெரியவர்கள் பாதுகாப்பின்றி குழந்தைகளை தனியாக பட்டாசு வெடிகளை கொளுத்த வேண்டாம்.
11. பட்டாசு விற்கும் கடைகள் அருகே புகை பிடிப்பதோ, புகைத்து முடித்த பின் அங்கு சிகரெட் துண்டுகளைஅஜாக்கிரதையாக வீசி எறிவதோ கூடாது.
12. பட்டாசு விற்கும் கடை அருகே சென்று விளம்பரத்துக்காகவோ, போட்டிக்காகவோ கூட பட்டாசுகளைவெடிக்கக் கூடாது.
13. பட்டாசு விற்பனையாளர்கள் எக்காரணத்தைக் கொண்டும் மெழுகுவர்த்தியோ, பெட்ரோமாக்ஸ் அல்லதுசிம்னி விளக்கையோ கடை அருகிலோ, உள்ளேயோ பயன்படுத்தக் கூடாது.
14. கால்நடைகள் அருகில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. ஏனெனில் அவை பயம் காரணமாக பாதசாரிகள்அல்லது டிரைவர்கள் மீது மோதி கடும் விபத்து ஏற்படக் காரணமாகும்.
15. பட்டாசுகளை போதிய இடைவெளி விட்டு கொளுத்த வேண்டும்.
தீவிபத்து மற்றும் வெடிகளினால் ஏற்படும் விபத்துக்கள் குறித்து குழந்தைகளுக்கு பெற்றோர்களும்,ஆசிரியர்களும் எடுத்துரைத்து அவர்களை வழிப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார் சரண்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications