தர மாட்டார்கள், கிடைக்கவே கிடைக்காது-ஜெ
மதுரை:
திமுகவின் வாக்குறுதிகளை வாக்காளர்கள் நம்பி ஏமாந்து விடக் கூடாது என்று அதிக பொதுச் செயலாளர்ஜெயலலிதா கூறியுள்ளார்.
மதுரை மத்திய தொகுதியில் அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பாவை ஆதரித்து ஜெயலலிதா பிரசாரம்மேற்கொண்டார். தெற்கு வாசலிலிலிருந்து அவர் பிரசாரத்தைத் தொடங்கினார்.பெரும் திரளாக கூடிய அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வேனிலிருந்தபடி ஜெயலலிதாபேசுகையில்,
நான்கு மாதங்களுக்கு முன்பு அமைந்த திமுக மைனாரிட்டி அரசில் மக்கள் வேதனைகளையும், துன்பங்களையும்அனுபவித்து வருகின்றனர்.
மறுபடியும் மறுபடியும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியதால் அனைத்துப் பொருட்களின் விலைகளும்உயர்ந்துள்ளன.
மத்திய அரசும், அந்த ஆட்சியில் அங்கம் வகிக்கும் திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளும்தான் இந்தஎரிபொருள் விலை உயர்வுக்கும், விலைவாசி உயர்வுக்கும் காரணம்.
சிக்குன் குனியா தமிழகத்தை படாதபாடு படுத்தி வருகிறது. இதுவரை 287க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.லட்சக்கணக்கானோர் நோயினால் பாதிக்கப்பட்டு நடமாட முடியாமல் உள்ளனர். ஆனால் திமுக அரசோபாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமோ, சிகிச்சையோ அளிக்க முன் வராமல் யாரும் இறக்கவில்லை எனகூறுகிறது.
வாக்குகளைக் கவர தொடர்ந்து திமுக அரசு மக்களை ஏமாற்றி வருகிறது. நிறைவேற்ற முடியாத பலவாக்குறுதிகளை அள்ளி வீசி வருகிறது. 2 ஏக்கர் நிலம் என்றார்கள். உங்களுக்குக் கிடைத்ததா.? வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டி என்றார்கள். உங்களுக்குக் கிடைத்ததா.? காஸ் அடுப்பு இணைப்புடன் இலவசம்என்றார்கள் உங்களுக்குக் கிடைத்ததா?
தர மாட்டார்கள், கிடைக்காது, கிடைக்கவே கிடைக்காது. ஆட்சியைப் பிடிக்க நிறைவேற்ற முடியாத வாக்குறுதிஎன்று தெரிந்தும் அந்த வாக்குறுதிகளை அளித்தனர். பொய்யான வாக்குறுதியை சொல்லி ஆட்சியைப்பிடித்தனர்.
இப்போது உள்ளாட்சித் தேர்தல் முடிந்தவுடன் அத்தனையையும் நிறுத்தி விடுவார்கள். தேர்தலை மனதில்வைத்துத்தான் சிலருக்கு மட்டும், அதாவது திமுகவினருக்கு மட்டும் டப்பா டிவியை வழங்கினர்.
உள்ளாட்சி தேர்தல் முடியட்டும், அதன் பின்னர் இந்தத் திட்டங்களை அப்படியே நிறுத்தி விடப் போகிறார்கள்.அனைத்து வாக்குறுதிகளும் காற்றில் பறக்க விடப்படும்.
எனவே திமுக அரசு கூறும் வாக்குறுதிகளை மக்கள் நம்பக் கூடாது, ஏமாறாமல் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என்றார் ஜெயலலிதா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications