ஜோசப்பின் முன் அனுபவம்-நர்சிடமும் சில்மிஷம்
திருவனந்தபுரம்:
மலையாள டிவி நடிகை லட்சுமி கோபகுமாரிடம் சில்மிஷம் செய்ததாக சிக்கிய முன்னாள் கேரள அமைச்சர்பி.ஜே.ஜோசப், ஏற்கனவே சாலக்குடியைச் சேர்ந்த நர்ஸ் ஒருவரிடம் விமானத்தில் சில்மிஷ்ம் செய்துள்ளதாகதகவல் வெளியாகியுள்ளது.
மலையாள டிவி நடிகை லட்சுமி கோபகுமார் விமானத்தில் பயணம் செய்தபோது அவரிடம் செக்ஸ் சில்மிஷம்செய்ததாக சிக்கிய அமைச்சர் ஜோசப், அதுதொடர்பான பெண் ஐஜி சந்தியாவின் விசாரணை அறிக்கைக்குப்பின்னர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.ஜோசப் விவகாரம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த கேரள அரசு முடிவு செய்தது. ஆனால் அதில் தனக்குதிருப்தி இல்லை என்று கருதிய லட்சுமி தற்போது சென்னை விமான நிலைய போலீஸாரிடம் புகார் கொடுத்தார்.
அந்தப் புகாரின் பேரில் ஜோசப் மீது ஆலந்தூர் நீதிமன்றத்தில் போலீஸார் முதல் தகவல் அறிக்கையை தாக்கல்செய்துள்ளனர். இந்த நிலையில் லட்சுமியைப் போலவே ஏற்கனவே ஒரு நர்சிடம் ஜோசப் விமானத்தில்சில்மிஷம் செய்ததாக புதிய புகார் கிளம்பியுள்ளது.
சிமிரோஸ் பெல் ஜான் என்பவர் இதுதொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல்செய்துள்ளார். அதில்,
ஜோசப் மீதான பாலியல் புகார் குறித்த ஐஜி.சந்தியாவின் விசரணை அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல்செய்ய போலீசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும் இந்த வழக்கில் சாட்சி அளித்தவர்களை மீண்டும் விசாரணைசெய்ய வேண்டும்.
ஒரு பெண் என்ற நிலையிலும், பொறுப்புள்ள மகளிர் அமைப்பின் உறுப்பினர் என்ற முறையில்தான் இந்தவழக்கை தொடர்ந்துள்ளேன். அரசு அளித்துள்ள விசாரணை அறிக்கை ஒரு அரசியல் தந்திரமாகும்.
ஐஜியின் விசாரணை அறிக்கை திருப்பதியாக இல்லை என அரசு கூறுகிறது. இது ஜோசப் அமைச்சராக இருந்தார்என்பதற்காக வழக்கை திசை திருப்பும் முயற்சி. தொடர்பான செய்திகள் நடத்தப்பட்ட நீதி விசாரணை அறிக்கைகள்தலைமை செயலகத்தில் தூங்கிக் கொண்டு இருக்கிறது.
தொடர்பான செய்திகள்பும் ஜோசப் கடந்த 1995ம் ஆண்டு விமான பயணத்தின் போது சாலக்குடியைச் சேர்ந்த ஒரு நர்சிடம்தவறாக நடந்து கொண்டார். எனவே ஜோசப் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது மிகவும் அவசியமானதுஆகும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
லட்சுமி புகார் மீது ஜோசப் சந்தேகம்:
இதற்கிடையில் லட்சுமி கோபகுமார் அளித்துள்ள புகார் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என ஜோசப் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஜோசப் கூறியதாவது,
ஆகஸ்ட் மாதம் நடந்ததாகக் கூறப்படும் சம்பவத்திற்கு இப்போது சென்னை போலீசில் லட்சுமி புகார்கூறியிருப்பது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இந்த புகாரை நான் சட்ட ரீதியாக சந்திப்பேன். இது குறித்துநீதி விசாரணையில் உண்மை வெளிவரும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications