10,028 சத்துணவு அமைப்பாளர்கள் நியமனம்
சென்னை:
தமிழகத்தில் புதிதாக 10,028 சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
இது தொடர்பாக தமிழக அரசின் சமூக நலத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில்,பள்ளிகளில் செயல்படுத்தப்படும் மதிய உணவுத் திட்டம் மற்றும் அங்கன்வாடி மையங்களில் செயல்படுத்தப்படும்ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் ஆகிய பணிகளை நிறைவேற்ற பல்வேறு பிரிவுகளில் இந்தநியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் ஊனற்றோருக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகை ரூ. 200லிருந்து ரூ. 500 ஆகஉயர்த்தப்படுகிறது.
இந்த அறிவிப்பு மூலம் 440 சத்துணவுத் திட்ட பணியாளர்கள், 1992 சமையல்காரர்கள், 708 சத்துணவுத் திட்டஉதவியாளர்கள், 2,368 அங்கன்வாடி உதவியாளர்கள் உள்பட 5,508 பணியிடங்கள் தற்போது நிரப்பப்படஉள்ளன.
இதுதவிர புதிதாக 3,049 அங்கன்வாடி மையங்களைத் தொடங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் கூடுதலாக4,520 பேர் தேவைப்படுகின்றனர்.
ஏற்கனவே உள்ள நடைமுறையின்படி கல்வித் தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு முறை மற்றும் பணியாளர்தேர்வு முறை ஆகியவற்றின்படி புதிய பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications