கடலில் உடைந்த கப்பல்: இந்திய மாலுமி பலி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

ஜப்பான் அருகே நடுக் கடலில் பனாமா நாட்டுக் கப்பல் உடைந்து மூழ்கியதில் அதில் பயணம் ஒரு இந்தியமாலுமி பலியானார். 9 பேரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பனாமா நாட்டுக்குச் சொந்தமான அந்தக் கப்பல் ஆஸ்திரேலியாவிலிருந்து டோக்கியோ அருகே உள்ள கஷிமாஎன்ற துறைமுகத்திற்கு வந்து கொண்டிருந்தது.

ஜப்பானுக்கு அருகே கப்பல் வந்து கொண்டிருந்தபோது கடும் புயல் காற்றில் சிக்கி கப்பல் இரண்டாக உடைந்தது.இதனால் கப்பலில் இருந்த மாலுமிகள் மற்றும் ஊழியர்கள் கடலில் மூழ்கினர்.

இதுகுறித்துத் தகவல் அறிந்துவுடன் ஜப்பானிலிருந்து மீட்புக் கப்பல் விரைந்து வந்தது. அவர்கள் 13 பேர் கடலில்மூழ்கி விட்டனர். அவர்களில் நான்கு பேர் இந்தியர்கள் ஆவர். அதில் 34 வயது மாலுமியான இந்தியர்மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். 2 இந்தியர்களின் நிலை கவலைக்கிடமாகஉள்ளது.

கப்பலில் மொத்தம் 25 இந்தியர்களும் ஒரு பாகிஸ்தான் நாட்டவரும் பயணம் செய்தனர் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது. அனைவருமே காயமடைந்துள்ளனர். கப்பலுக்குள் சிக்கிய 13 ஊழியர்களும் பத்திரமாகமீட்கப்பட்டனர்.

கடலில் மூழ்கிய 9 பேரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. அவர்கள் எந்த நாட்டவர் என்பது தெரியவில்லை.

ஜப்பான் கடலில் நிலவிய மோசமான வானிலை, சூறாவளிக் காற்று, கன மழை காரணமாக இந்த கப்பல் சிக்கிஉடைந்து, விபத்துக்குள்ளானது. கப்பலில் 1,90,000 டன் எடை கொண்ட இரும்புத் தாது எடுத்து வரப்பட்டதுகுறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+