காதலி வீட்டில் நூதன கொள்ளை: காதலன் கைது
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே காதலியின் வீட்டிலிருந்து ரூ.77 லட்சம் பணத்தை நூதன முறையில்கொள்ளை அடித்த காதலனை போலீஸார் 7 மணி நேரத்தில் கைது செய்தனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடகரையைச் சேர்ந்தவர் கார்த்திக். இவருக்கும், கைலசாப்பட்டிஎன்ற கிராமத்தைச் சேர்ந்த சாந்திக்கும் இடையே காதல் ஏற்பட்டது.சாந்தி வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரிடம் ரூ.77 லட்சம் பணம் இருப்பது குறித்து கார்த்திக்குத் தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பணத்தை அபேஸ் செய்ய திட்டமிட்டார் கார்த்திக்.
இதைத் தொடர்ந்து சாந்தியிடம், உங்களது வீட்டுக்கு வருமான வரி சோதனைக்கு வரப் போவதாக எனக்குத்தகவல் கிடைத்துள்ளது. எனவே வீட்டில் பணம் ஏதாவது இருந்தால் என்னிடம் கொடு, அதை நான் பத்திரமாகவைத்திருக்கிறேன். சோதனை முடிந்ததும் திருப்பித் தருகிறேன் என்று கூறியுள்ளார்.
பயந்து போன சாந்தியும், ரூ.77 லட்சம் பணத்தை கார்த்திக்கிடம் கொடுத்துள்ளார். அதன் பின்னர் கார்த்திக்கின்நண்பர்கள் சிலர், வருமான வரி அதிகாரிகள் போல சாந்தி வீட்டுக்கு வந்துள்ளனர்.
அவர்களைப் பார்த்ததும் சாந்திக்கு சந்தேகம் வந்துள்ளது. அவர்கள் சென்ற பின்னர் போலீஸில் புகார் செய்தார்சாந்தி. போலீஸார் உடனடியாக வந்து சாந்தியிடம் நடந்தது குறித்து கேட்டறிந்தனர். அதன் பின்னர் நேராககார்த்திக்கை தேடிச் சென்றனர். ஆனால் அவர் வீட்டில் இல்லை.
இதையடுத்து கார்த்திக்கைப் பிடிக்க வலை வீசப்பட்டது. சுமார் 7 மணி நேர தேடுதலில் சிக்கினார் கார்த்திக்.அவரிடம் விசாரித்தபோது சதித் திட்டம் தெரிய வந்தது. இதையடுத்து கார்த்திக்கை போலீஸார் கைது செய்தனர்.
வருமான வரி அதிகாரிகள் போல நடித்த அவரது நண்பர்கள் 5 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்தநூதனக் கொள்ளைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications