மானம் போனதால் திமுகவுக்கு வந்தேன்: திருமா.
சென்னை:
அதிமுக கூட்டணியில் மானம் இழந்ததால்தான் திமுக கூட்டணியில் இணைய நேரிட்டது என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சேத்துப்பட்டில்பிரசாரம் செய்தார் திருமாவளவன். அப்போது அவர் பேசுகையில், சென்னை மாநகராட்சித் தேர்தலில் விடுதலைச்சிறுத்தைகளுக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் எங்களுக்கு திருப்தியே.கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் எங்களுக்குத் திருப்தி தரும் வகையிலான இடங்களை திமுகஒதுக்கியுள்ளது.
பேரவைத் தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் விகித்தாச்சார அடிப்படையில் இடப் பங்கீடுமேற்கொள்ளப்பட்டது. ஆனால் தற்போது உள்ளாட்சித் தேர்தலில் அதுபோல நடந்து கொள்ளவில்லை.எங்களுக்கு தருவதாக கூறப்பட்ட இடங்களில் அதிமுகவினரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
அதிமுக கூட்டணியின் தலைவரை சந்திக்க அதே கூட்டணியில் உள்ள பிற கட்சிகளின் தலைவர்களால்முடியவில்லை. அப்படியென்றால் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு என்ன மரியாதை? எனவேதான் மானத்தைகருதி அந்தக் கூட்டணியிலிருந்து நான் விலகினேன்.
சென்னை மாநகராட்சித் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றார் திருமாவளவன்.












Click it and Unblock the Notifications