பறவை காய்ச்சலை ஜெ பரப்பினாரா? தயாநிதி
கோவை:
தமிழகத்தில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் இலவச கலர் டிவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்என மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் கூறினார்.
கோவையில் கரும்புக்கடை சந்திப்பில் உள்ளாட்சித் தேர்தல் பிரசார கூட்டத்தில் தயாநிதி மாறன் பேசுகையில்,சட்டசபைத் தேர்தலின்போது கிலோ அரிசி 2 ரூபாய்க்கு வழங்கப்படும் என கருணாநிதி அறிவித்தார். இது எப்படிமுடியும் என்றார்கள் எதிர்க்கட்சியினர். ஆனால் வாக்குறுதியளித்தபடி இப்போது 2 ரூபாய்க்கு கிலோ அரிசிதரப்படுகிறது.இதேபோல இலவச கலர் டிவி தரப்படும் என்றார் கருணாநிதி. இப்போது 30,000 பேருக்கு கொடுத்துள்ளனர்.இன்னும் 5 மாதங்களில் ரூ. 750 கோடி மதிப்பில் 25 லட்சம் பேருக்கு கலர் டிவி கொடுக்கவுள்ளனர்.
வீட்டில் சாப்பிட வருகிறவர்களுக்கு ஒரே நேரத்தில் 10 தோசை சுட்டுக் கொடுங்கள் என்றால் முடியுமா?ஒவ்வொன்றாகத்தான் சுட்டுத் தர முடியும். அதுபோலத்தான் படிப்படியாக டிவி வழங்க நடவடிக்கைஎடுக்கப்படுகிறது.
விரைவில் ரேஷன் கார்டு உள்ள அத்தனை பேருக்கும் இலவச டிவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.இதேபோல பொங்கல் நாள் முதல் இலவச காஸ் அடுப்பு வழங்கப்படும். கொடுத்த வாக்குறுதிகளை 4மாதங்களில் நிறைவேற்றியுள்ளோம்.
ஒரு வீடு நன்றாக இருந்தால்தான் தெரு நன்றாக இருக்கும். தெரு நன்றாக இருந்தால்தான் நகரம் நன்றாக இருக்கமுடியும். நகரம் நன்றாக இருந்தால் தான் மாநிலம் நன்றாக இருக்கும். மாநிலம் நன்றாக இருந்தால் தான் நாடுநன்றாக இருக்க முடியும்.
எனவே உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வெற்றி பெறச்செய்யுங்கள் என்றார்.
உடுமலையில் நடந்த கூட்டத்தில் அவர் பேசுகையில், தமிழக மக்களுக்கு கலைஞர் இவ்வளவு செய்கிறாரே,அவருக்கு ஊக்கமளிக்க வேண்டுமல்லவா?. அவருக்கு ஊக்கம் அளிக்க வேண்டுமானால், உள்ளாட்சித் தேர்தலில்ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வதுதான்.
ஒரு பிரச்சினையும் சொல்ல முடியாததால், சிக்குன் குனியாவை கையில் எடுத்துள்ளனர். அந்த காய்ச்சல் ஒருகொசு மூலம் வருகிறது. இதை என்ன நாங்கள் பாக்கெட்டில் எடுத்துச் சென்று வீடு வீடாக போட்டு விட்டுவந்தோமா?
உங்களது ஆட்சிக்காலத்தில் பறவைக் காய்ச்சல் வந்ததே? சுனாமி வந்ததே? இதற்கெல்லாம் நீங்கள்தான் காரணம்என்று வாதம் செய்வது சரியாகுமா? ஜெயலலிதா கொண்டு வந்த மழை நீர் சேகரிப்பு தொட்டிகளில் எல்லாம்தண்ணீர்தேங்கி கொசு வளர்கிறது.
மற்ற தலைவர்கள் வாக்குறுதிகளை அள்ளி வீசுவார்கள். ஆனால் சொன்னதை நிறைவேற்றுபவர் கருணாநிதிமட்டுமே என்றார் தயாநிதி மாறன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications