மதுரை மத்திய தொகுதியில் பிரச்சாரம் ஓய்ந்தது
மதுரை:
மதுரை மத்திய தொகுதியில் 11ம் தேதி நடைபெறவுள்ள இடைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் முடிவடைந்தது.
பிடிஆர் பழனிவேல் ராஜனின் மறைவைத் தொடர்ந்து நடக்கும் இந்த இடைத் தேர்தலில் திமுக, அதிமுக, தேமுதிக எனமும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. திமுக சார்பில் கெளஸ் பாட்சா, அதிமுக சார்பில் ராஜன் செல்லப்பா, தேமுதிக சார்பில்பன்னீர்செல்வம் போட்டியிடுகின்றனர். இவர்கள் தவிர 16 சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.இதையடுத்து கடந்த ஒரு மாதமாக அனல் பறக்கும் பிரச்சாரம் நடந்து வந்தது. முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தேமுதிக தலைவர் விஜய்காந்த் உள்ளிட்ட தலைவர்கள்மதுரையில் முகாமிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர், பொதுக் கூட்டங்களிலும் பேசினர்.
இந் நிலையில் இன்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. அதன் பின்னர் பிரசாரம் செய்யக் கூடாது. வீடு வீடாகசென்று அமைதியான முறையில் வாக்குகள் சேகரிக்கலாம். நாளையும் வீடு வீடாக வாக்குகள் சேகரிக்கஅனுமதிக்கப்படும். நாளை மறுதினம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடக்கிறது.
இதையடுத்து தேர்தலுக்கான பாதுகாப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது. துணை ராணுவப் படைகளும் மதுரைக்குவரவழைக்கப்பட்டுள்ளன.
மத்திய தொகுதிக்குட்பட்ட மதுரை மாநகராட்சியின் 15 வார்டுகளிலும் இன்று மாலை 5 மணி முதல் 11ம் தேதிமாலை 5 மணி வரை உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பிரசாரத்தின்போது பெருமளவில் வன்முறைகளும், தாக்குதல்களும் நடந்ததால், வாக்குப் பதிவின்போதும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறக் கூடும் என அஞ்சப்படுகிறது. எனவே பாதுகாப்புக்காக கூடுதலாகதுணை ராணுவப் படைகளும் வரவழைக்கப்பட்டுள்ளன.
மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின் 3 கம்பெனி போலீஸாரும், மத்திய ரிசர்வ் போலீஸாரின் 4கம்பெனியினரும் வரவழைக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
தமிழக போலீஸார் மட்டும் மொத்தம் 5,000 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். நேற்றுபோலீஸார் மற்றும் துணை ராணுவப் படையினர் மதுரை மத்திய தொகுதியில் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
மதுரை மத்திய தொகுதிக்கு சம்பந்தப்படாத அரசியல் கட்சித் தலைவர்கள், பிரமுகர்கள் இன்று மாலை 5மணிக்குப் பிறகு இருக்கக் கூடாது என்று ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications