காதல் தோல்வி: வேட்பாளர் தற்கொலை!
Subscribe to Oneindia Tamil
கன்னியாகுமரி:
குமரி மாவட்டம் மயிலாடி அருகே காதல் தோல்வியைத் தாங்க முடியாமல் சுயேச்சை வேட்பாளர் தற்கொலைசெய்து கொண்டார்.
மயிலாடி அருகே உள்ள நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பரமார்த்தலிங்கம். இவரது மகன் சேகர். இவர் பூவியாபாரம் செய்து வந்தார். நடைபெறவுள்ள பஞ்சாயத்து தேர்தலில் நல்லூர் ஊராட்சி 3வது வார்டு கவுன்சிலர்பதவிக்கு சுயேச்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்திருந்தார்.வேட்பு மனு தாக்கலுக்குப் பின்னர் தீவிரமாக பிரசாரம் செய்து வந்தார். இந்த நிலையில் திடீரென விஷம் குடித்துத்தற்கொலை செய்து கொண்டார் சேகர்.
அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை சேகர் காதலித்து வந்துள்ளார். இவரது காதலுக்கு இரு வீட்டிலும்எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சோகமடைந்த சேகர், காதலே போய் விட்டது, தேர்தல் ஒரு கேடா என்றுநினைத்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications