ஆளுநர் பெயரில் தேர்தல் அதிகாரிக்கு மிரட்டல்
காஞ்சிபுரம்:
ஆளுநர் பர்னாலாவின் பெயரைக் கூறி காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் பார்வையாளருக்கு செல்போனில் மிரட்டல்விடுத்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கான உள்ளாட்சித் தேர்தல் பார்வையாளராக செயல்படுபவர் முத்துக்குமாரசாமி.தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது முத்துக்குமாரசாமி கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.இந்த நிலையில் அவரது செல்போனை ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார். நான் ஆளுநர் பர்னாலாவின்இல்லத்தில் இருந்து பேசுகிறேன் என்று மிரட்டல் தொனியில் பேசியுள்ளார். அவர் குறித்து சந்தேகமடைந்தமுத்துக்குமாரசாமி பேச்சை துண்டித்துக் கொண்டார்.
சிறிது நேரத்தில் மீண்டும் அதே எண்ணிலிருந்து போன் வந்தது. நான் ஆளுநர் வீட்டிலிருந்து பேசுகிறேன்.மரியாதையே இல்லாமல் துண்டித்து விட்டீர்கள். நான் நினைத்தால் என்ன நடக்கும் தெரியுமா என்று அவர்மிரட்டியுள்ளார்.
இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட தொலைபேசி எண்ணை மாவட்ட எஸ்.பி. அமல்ராஜைத் தொடர்பு கொண்டுபுகாராகக் கொடுத்தார் முத்துக்குமாரசாமி. இதையடுத்து போலீஸார் பார்வையாளரை மிரட்டிய நபரை தேடிவருகின்றனர்.












Click it and Unblock the Notifications