எங்கள் கை பூப்பறித்து கொண்டிருக்காது-வைகோ

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி:

திமுகவினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் அதிமுக, மதிமுக தொண்டர்களின் கைகள் பூப்பறித்துக்கொண்டிருக்காது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

நெல்லையில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாகலந்து கொண்டு பேசினார். இதே கூட்டத்தில் வைேகாவும் பங்கேற்று பேசினார்.

வைகோ பேசுகையில், சட்டசபையில் தன்னந்தனியாக ஜான்சி ராணி போல சென்று கேள்விக் கணைகளைதொடுத்தவர் ஜெயலலிதா. அவர் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் திணறினார்கள்.

நீங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் எப்போதாவது சட்டசபைக்கு சென்றதுண்டா? சென்றீர்கள், எதற்காக, சம்பளப்பணத்தை வாங்குவதற்காக.

தேர்தலையொட்டி காவல்துறையின் அராஜகம் எல்லை மீறி போய்க் கொண்டிருக்கிறது. பொய் வழக்கு போட்டுகழகத் தோழர்களை உள்ளே தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். காவல் நிலையத்திற்குள்ளும் புகுந்து திமுகவினர்அராஜகம் செய்கிறார்கள்.

மதுரையில் ஒரு வேதனையான சம்பவம். முன்னாள் அமைச்சர் மதுசூதனன் மீது பொய் வழக்கு போட்டு,சோதனை என்ற பெயரில் அவரது ஆடைகளை அலங்கோலப்படுத்தியுள்ளனர். கையை பின்புறமுமாக கட்டிஅழைத்துச் சென்றிருக்கிறார்கள். அவரது உறவினர்களின் வீடுகளை தாக்கியுள்ளனர்.

திமுகவினர் மீது புகார் கொடுக்க காவல் நிலையம் சென்றால் அதிமுக தொண்டர்கள் மீதே பொய் வழக்குப்போடுகிறார்கள். திமுகவினர் கண் எதிரிலேயே அதிமுகவினரை தாக்குகின்றனர்.

என்ன இது, ஜனநாயகமா, சர்வாதிகாரமா? காவல்துறைக்கு அமைச்சர் கருணாநிதி. அவர் இதற்கு பதில் சொல்லவேண்டாமா? இதே நிலை நீடித்தால் அதிமுக, மதிமுக தொண்டனுடைய கைகள் பூப்பறித்துக் கொண்டிருக்காது.எங்களது தொண்டர்கள் தாக்கப்பட்டால் தாக்கிய கைகளை முறிப்போம்.

சீட் ஒதுக்குவதில் காங்கிரஸ் கட்சிக்கு நாமம் போட்டு விட்டார்கள். இந்த சர்வாதிகாரம் ஒழிய ஜனநாயக மக்கள்கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். சட்டமன்றத் தேர்தலில் தவறி விட்டோம். உள்ளாட்சித் தேர்தலில்அப்படி இருந்து விடக் கூடாது என்றார் வைகோ.

கூடுதல் பார்வையாளரை அனுப்ப வேண்டும்:

இந் நிலையில் தேர்தல் கமிஷனுக்கு வைகோ ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில்,

மதுரை மத்திய தொகுதியில் வரும் 11ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஜனநாயக விதிமுறைகளும்,தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளும் தமிழகத்தை ஆளுகின்ற திமுக அரசு விதிமீறல்கள் மூலம் காற்றில்பறக்க விடப்படுள்ளன. இதனை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருவதோடு, உடனடியாக உரியநடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

திமுக அரசு, தமிழகக் காவல் துறையின் துணையோடு இடைத்தேர்தல் நடைபெறுகின்ற சட்டமன்றத் தொகுதிமுழுவதும் பயங்கர வாதத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. ஒரு ஓட்டுக்கு ரூ. 500 வீதம் வாக்களர்களுக்கு லஞ்சம்கொடுத்து வருகிறார்கள்.

இந்த செய்தியை அறிந்து அந்த தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா அவரதுஆதரவாளர்களுடன் அங்கு விரைந்து சென்று காவல் துறையினரிடம் புகார் அளிக்க சென்றபோது அவரையும்,அவரது ஆதரவாளர்களையும் திமுகவினர் தாக்கினர். இதில் ராஜன் செல்லப்பாவின் கார் முற்றிலும்சேதமடைந்தது.

இந்த சம்பவத்துக்கு காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஒரு பார்வையாளரைப் போல்இருந்தது. மேலும் அதிமுக தொண்டர்கள் மீதும் பொறுப்பாளர்கள் மீதும் பொய் வழக்கு போட்டு கைது செய்தது.

இதனால் வாக்களர்கள் மத்தியில் மனரீதியான ஒரு பயத்தை ஏற்படுத்து வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றி கள்ளஓட்டு போட திட்டமிட்டு இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

தமிழக காவல்துறை இந்த தொகுதியில் செயல்பட அனுமதிக்கப்பட்டால் நியாயமான, நேர்மையானவாக்குப்பதிவு நடைபெற வாய்ப்பில்லை. இதனால் மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதிக்கு மத்திய பாதுகாப்புபடையை தேர்தல் பணிக்க அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+