சும்மா விடுவீங்களா அண்ணனை?

Subscribe to Oneindia Tamil

மதுரை:

தேர்தலுக்குப் பின்னர் திமுக அறிவித்த இலவச கலர் டிவி திட்டத்தை நிறைவேற்றாமல் போனால் மதுரையிலேயேதங்கியுள்ள எனது அண்ணனை (மு.க.அழகிரி) சும்மா விட்டு விடுவீங்களா என்று உள்ளாட்சித் துறை அமைச்சர்மு.க.ஸ்டாலின் மதுரை மத்திய தொகுதியில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது பேசினார்.

மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான நேற்று மகபூப்பாளையம் பகுதியில்வேனிலிருந்தபடி மு.க.ஸ்டாலின் பேசினார். அவருடன் அவரது அண்ணன் மு.க.அழகிரியும் கலந்து கொண்டார்.இருவரும் இணைந்து பிரசாரம் செய்ததால் திமுக தொண்டர்களிடையே உற்சாகம் கரை புரண்டோடியது.

ஸ்டாலின் பேசுகையில், அதிமுகவினர் தோல்வி பயத்திற்கு வந்து விட்டனர். அராஜகம் மூலம் தேர்தலை வெல்லமுயன்றார்கள். ஆனால் அதை நாம் தவிடுபொடியாக்கி விட்டோம். இதனால் இப்போது நீதிமன்றத்தைநாடியுள்ளனர்.

இதே தொகுதியில் உங்களால் சட்டசபைக்கு அனுப்பி வைக்கப்பட்டவர் மறைந்த பி.டி.ஆர். பழனிவேல்ராஜன்.அவர் விரும்பியபடி, இந்தத் தொகுதிக்கு பெருமை சேர்க்கும் வகையில் அறநிலையத்துறை அமைச்சர்பொறுப்பை கலைஞர் வழங்கினார்.

பதவியேற்று ஒரு வார காலத்தில் உங்களையெல்லாம் சந்தித்து நன்றி சொல்ல அவர் வந்தபோது ரயிலிலேயேஅவரது உயிர் பிரிந்தது. அந்த இடத்தை பூர்த்தி செய்வதற்குத்தான் இந்த இடைத் தேர்தல். அவர் விட்டுச் சென்றபணிகளை கெளஸ் பாட்ஷா நிறைவேற்றுவார்.

தேர்தல் முடிந்த பிறகு கலர் டிவி தர மாட்டார்கள் என்கிறார் ஜெயலலிதா. தராவிட்டால் நீங்கள் தான் எங்களைவிட்டு விடுவீர்களா? உங்களிடம் என்னை வர விடுவீர்களா.? நானாவது 2 மாதத்திற்கு, 3 மாதத்திற்கு ஒரு முறைவருபவன். ஆனால் எனது அண்ணன் இங்கேயே இருப்பவர். அவரை நீங்கள் சும்மா விட்டு விடுவீர்களா?

கலர் டிவி இல்லாத வீடுகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று முன்பு கூறியிருந்தார் கலைஞர். இப்போதுரேஷன் கார்டு உள்ள அனைவருக்குமே இலவச கலர் டிவி தரப்படும் என அறிவித்துள்ளார் என்றார் ஸ்டாலின்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+