ஊர்வசி தற்கொலை முயற்சி?
முந்தானை முடிச்சு மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிகமானவர் ஊர்வசி. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம்ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தற்போது டிவி தொடர்களிலும் நடித்து வருகிறார். சன்மற்றும் சூர்யா டிவிகளில் ஒளிபரப்பாகும் தங்க வேட்டை நிகழ்ச்சியையும் சிறிது காலம் நடத்தி வந்தார்.
அவருக்கும், மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயனுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.இருவருக்கும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் ஊர்வசி குறித்து நேற்று சென்னையில் வதந்திபரவியது.
அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும், காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும்செய்தி நிறுவனங்களுக்கும், பத்திரிக்கை அலுவலகங்களுக்கும் செய்திகள்வந்தன.
இதையடுத்து செய்தியாளர்கள் ஊர்வசியின் வீட்டை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது ஊர்வசியேபோனில் பேசினார். நான் நலமாகத்தான் இருக்கிறேன். இந்த வதந்திஇங்கு மட்டுமல்ல கேரளா வரை பரவிவிட்டது. 100 சதவீத நலத்துடன் இருக்கிறேன் என்று சிரித்துக் கொண்டே விளக்கமளித்தார் ஊர்வசி.பிறகு எப்படி வதந்தி பரவியது என்று விசாரித்தபோது என்னை ஒருவர் விழா ஒன்றில் கலந்து கொள்ளும்படிவற்புறுத்தி வந்தார். ஆனால் எனக்கு உடல் நலம் சரியில்லை என்று கூறி அவரை திருப்பி அனுப்பி விட்டேன்.இந்தக் கோபத்தில் இப்படி அவர் வதந்தி பரப்பி விட்டார் என்றார் ஊர்வசி.
ஊர்வசிக்கு சிக்குன்குனியா காய்ச்சல் வந்து வீட்டில் ஓய்வெடுத்து வருவதாகவும் கூறப்பட்டது.












Click it and Unblock the Notifications