நளினியை விடுதலை செய்ய வேண்டும்: திருமா.
புதுச்சேரி:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினியை விடுதலை செய்யவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன் கோரியுள்ளார்.
புதுச்சேரி வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக அரசு அண்ணா பிறந்த நாளன்று பலஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்தது. அதேபோல நளினியும் பல ஆண்டுகளாக சிறையில் வாடிவருகிறார். எனவே அவரையும் விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.நாடாளுமன்றத் தாக்குதல் சம்பவத்தில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அப்சல் குருவுக்கு மன்னிப்பு வழங்கிதூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நளினிக்கு, சோனியா காந்தியின் தலையீட்டால்ஆயுள் தண்டனையாக அது மாற்றப்பட்டது. அதேபோல அப்சல் குருவின் தண்டனையையும் குறைக்க வேண்டும்.
ஜிப்மர் பிரச்சினையில் ஊழியர்களின் கோரிக்கையை நான் ஆதரிக்கிறேன். எனவே மத்திய அரசு உடனடியாகஊழியர்களின் கோரிக்கைகளை பரிவுடன் பரிசீலிக்க வேண்டும்.
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் கான்ஷிராமின் திடீர் மரணம் தலித் வகுப்புக்கும், நலிவடைந்த மக்களுக்கும்பேரிழப்பாகும்.
பாண்டிச்சேரியின் பெயரை புதுச்சேரி என்று மாற்றியிருப்பதை வரவேற்கிறேன். புதுவை மாநிலத்தில், ஜாதிச்சான்றிதழ் கிடைப்பதில் பெரும் தாமதம் நிலவுகிறது. இதைத் தவிர்க்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்என்றார் திருமாவளவன்.












Click it and Unblock the Notifications