வீராணத்தை நினைத்து ஓட்டு: வைகோ
சென்னை:
சென்னை மக்கள் புதிய வீராணம் திட்டத்தின் மூலம் தவித்த வாய்க்கு தண்ணீர் தந்தவர் ஜெயலலிதா என்பதைமனதில் நினைத்து வாக்குகளை செலுத்த வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சென்னை புரசைவாக்கம் தானா தெருவில் நடந்த அதிமுக கூட்டணியின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டுவைகோ பேசியதாவது:புதிய வீராணம் திட்டத்தின் மூலம் சென்னை நகர மக்களுக்கு தவித்த வாய்க்குத் தண்ணீர் கொடுத்தவர்ஜெயலலிதா. இந்தத் திட்டத்தை அப்போது அத்தனை எதிர்க்கட்சிகளும் கடுமையாக எதிர்த்தன. ஆனால்திட்டத்தை நிறைவேற்றினார் ஜெயலலிதா. இதன் மூலம் நிரந்தரமாக தண்ணீர்ப் பிரச்சினையை தீர்த்துள்ளார்.
அத்தோடு நின்றாரா? டேங்கர் டேங்கராக வெளியூர்களிலிருந்து சென்னை மாநகருக்கு தண்ணீர் கொண்டுமக்களின் தாகத்தைப் போக்கியவர் அவர். ஓட்டுப் போடும் முன்பு ஜெயலலிதாவின் இந்த செயலை நினைத்துபின்னர் உங்களது ஓட்டுக்களை செலுத்துங்கள்.
சிக்குன் குனியாவுக்கு ஒருவரும் இறக்கவில்லை என்று தலைமைச் செயலாளர் திரிபாதி பேசுகிறார். அவர்எப்போது அரசியலில் சேர்ந்தார்? சிக்குன்குனியாவினால் இறந்தவர்களின் பட்டியலை ஜெயலலிதாகொடுத்துள்ளார். ஆனால் அது பொய் என்று திரிபாதி கூறுகிறார்.
அரசுப் பதவியில் உள்ள நீங்கள் உங்களது கடமையை சரி வரச் செய்ய வேண்டும். அரசியல்வாதி போல பேசக்கூடாது.
முதல்வர் கருணாநிதிக்கு இந்தக் கூட்டத்தின் வாயிலாக கேட்கிறேன், சிக்குன்குனியாவால் இறந்தவர்களின்பட்டியலை, பெயர், முகவரியோடு கொடுத்தள்ளார் ஜெயலலிதா. அதை வைத்து விசாரணைக் கமிஷன் அமைக்கநீங்கள் தயாரா?
நியாயமாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடந்தால் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றார்வைகோ.












Click it and Unblock the Notifications