மக்களுக்காக கக்கூஸ் கழுவ தயார்: விஜயகாந்த்
நாகர்கோவில்:
மக்களுக்காக கக்கூஸ் (கழிப்பறை) கழுவவும், தெருவைக் கூட்டவும் கூட நான் தயார்என்று தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
நாகர்கோவிலில் நடந்த உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தின்போது விஜயகாந்த்பேசுகையில், தமிழகம் முழுவதும் தேமுதிகவினரை பிடித்து உள்ளே போடும் வேலைநடந்து வருகிறது. இப்படிச் செய்வதன் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள வார்டுகளில்தலா 100 ஓட்டுக்களை தடுத்து விடலாம் என்ற நினைப்பில் திமுகவினர் உள்ளனர்.காவல்துறையும் இவர்களுக்கு உடந்தையாக உள்ளது. தேமுதிக தொண்டர்களின் தாய்,தந்தையிடம் சென்று, எங்காவது வெளியூருக்கு போகச் சொல்லுங்கள்.இல்லாவிட்டால் உங்கள் மகன் உங்களுக்கு மகனாக இருக்க மாட்டான் என்றுமிரட்டுகிறார்கள்.
இப்படித்தான் எம்.ஜி.ஆர். திமுகவை விட்டு வெளியேறியபோதும் திமுக மிரட்டல்நடவடிக்கையை கையாண்டது. அப்படி செய்தும் கூட ஒன்றும் பண்ண முடியவில்லைஅவர்களால். அதிமுகவை உருவாக்கினார் எம்.ஜி.ஆர். அதுதான் மெளனப் புரட்சி,மக்கள் புரட்சி.
அதேபோல இப்போது தேமுதிகவை அழிக்க நினைக்கிறார்கள். ஆனால் அதுமுடியாது. காரணம் இது சுயம்பு போல உருவான கட்சி. மற்ற கட்சிகளைப் போலஎதிலிருந்தும் பிரிந்து வந்த கட்சி கிடையாது. மக்கள் உருவாக்கிய கட்சி.
எனக்கு வாய்ப்பு தந்தால் கொசுவை ஒரு வருடத்துக்குள் அழித்து விடுவேன் என்றுகூறினேன். உடனே கலைஞர், கொசு அடித்து முதல்வராக நினைக்கிறாரா, சுகாதாரப்பணியாளராகப் போகிறாரா என்று கிண்டல் அடிக்கிறார். பொதுமக்களுக்காக கொசுஅழிப்பது என்ன கக்கூஸ் கழுவக் கூட நான் தயார். தெருத் தெருவாக கூட்டவும் நான்தயார் என்றார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications