சிபிஎஸ்இ: 6ம் வகுப்பு முதல் செக்ஸ் கல்வி!
சென்னை:
மத்திய அரசின் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவ, மாணவியருக்கு 6ம் வகுப்பு முதல் செக்ஸ்கல்வி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இளம் வயதினருக்கு பாலியல் தொடர்பான அடிப்படை அறிவை கற்பிக்கும் வகையில், கல்வித் திட்டத்தில் செக்ஸ்கல்வியை அறிமுகப்படுத்த மத்திய பள்ளிக் கல்வி வாரியம் (CBSE) முடிவு செய்துள்ளது.இதன்படி 6ம் வகுப்பு முதல் இந்த செக்ஸ் கல்வி அறிமுகப்படுத்தப்படும். வாலிப வயதில் ஆண், பெண் உடலில்ஏற்படும் மாற்றங்கள், செக்ஸ் குறித்த அடிப்படை விஷயங்கள் மாணவ, மாணவியருக்கு போதிக்கப்படும்.
உடல் ரீதியான மாற்றங்கள், ஈர்ப்புகள், பால்வினை நோய்கள், உடல் உறுப்புகள் குறித்த அடிப்படை விஷயங்கள்,எய்ட்ஸ் விழிப்புணர்வு உள்ளிட்டவை இந்த பாடத் திட்டத்தில் இடம் பெறும்.
டீன் ஏஜ் எனப்படும் 13 வயது முதல் 19 வயது வரையிலான கால கட்டத்தில் மன ரீதியாக, உடல் ரீதியாகஏற்படும் மாற்றங்கள், உளவியல் பிரச்சினைகள், அவற்றை எப்படி சமாளிப்பது, சந்திப்பது என்பது குறித்தும்கற்றுத் தரப்படும்.
இதற்கென தனியாக புத்தகம் எதுவும் வெளியிடப்பட மாட்டாது. விநாடி வினா, விவாதங்கள், நாடகம் உள்ளிட்டஊடகங்கள் வாயிலாக இவை போதிக்கப்படும். இதற்கென தனியாக தேர்வும் இருக்காது.
செக்ஸ் குறித்த அடிப்படை அறிவு மாணவ, மாணவியருக்கு இருக்க வேண்டும், அதன் மூலம் வாலிப வயதில்ஏற்படும் சவால்களை எளிதில் அவர்கள் சந்திக்க வேண்டும் என்பதுதான் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம்.
வருகிற கல்வியாண்டு முதல் இந்த செக்ஸ் கல்வி அறிமுகமாகும் எனத் தெரிகிறது. இருப்பினும் அதற்கு முன்புபெற்றோர்கள், ஆசிரியர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளவும் சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications