மதுரை இடைத் தேர்தல்: 68.7% வாக்குப் பதிவு
மதுரை:
மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தலில் நோற்று மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடைந்தது. 68.7சதவீத வாக்குகள் பதிவாகின.
முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜனின் திடீர் மறைவு காரணமாக மதுரைமத்திய தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. திமுக சார்பில் கெளஸ் பாட்ஷா,அதிமுக சார்பில் ராஜன் செல்லப்பா, தேமுதிக சார்பில் பன்னீர் செல்வம் உள்படமொத்தம் 19 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.இடைத் தேர்தல் வாக்குப் பதிவு நேற்று காலை 7 மணிக்குத் தொடங்கியது.காலையிலேயே நீண்ட வரிசையில் நின்று வாக்காளர்கள் வாக்களித்தனர். வாக்குப்பதிவு வீடியோவில் படமாக்கப்பட்டது. மொத்தம் உள்ள 154 வாக்குச் சாவடிகளும்பதட்டமானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், பலத்த பாதுகாப்புபோடப்பட்டிருந்தது.
மேலமாசி வீதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில், திமுக வேட்பாளர்கெளஸ் பாட்ஷா வாக்களித்தார். வாக்குப் பதிவு தொடங்கிய 1 மணி நேரத்திலேயே20 சதவீத வாக்குகள் பதிவாகின.
பிற்பகல் 1 மணி நிலவரப்படி 45 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்குப் பதிவுநடைபெறும் வாக்குச் சாவடிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் உதயசந்திரன், தென்மண்டல காவல்துறை ஐஜி சஞ்சீவ் குமார் ஆகியோர் சென்று சுற்றிப் பார்த்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் உதயசந்திரன் பேசுகையில், வாக்குப் பதிவு காலை 7மணிக்குத் தொடங்கி அமைதியான முறையில் நடந்து வருகிறது. எந்தவிதமானஅசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை.
வாக்குச் சாவடிகளுக்கு போதிய அளவில் பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது. மத்திய ரிசர்வ் போலீஸ், தொழிலக பாதுகாப்புப் படையினர் மற்றும் உள்ளூர்போலீஸார், வெளி மாநில போலீஸார் ஆகியோர் பாதுகாப்புப் பணியில்ஈடுபடுத்தப்பட்னர்.
வெளியூர்க்காரர்கள் தொகுதிக்குள் நுழையக் கூடாது என தடை விதிக்கப்பட்டிருந்தது.எனவே தொகுதியின் எல்லையில் வெளி மாநில போலீஸார் கண்காணிப்புப் பணியில்ஈடுபடுத்தப்பட்டனர்.
தொகுதி முழுவதையும் அதி விரைவுப் படையினரும் ரோந்து சுற்றி வந்தனர். வாக்குச்சாவடிகளுக்கு 100 மீட்டர் தொலைவிலேய வாக்காளர்கள் நிறுத்தப்பட்டு, வாக்காளர்அடையாள அட்டை உள்ளிட்ட ஏதாவது அடையாள ஆவணங்களை காட்டி தங்களதுஅடையாளத்தை நிரூபித்த பின்னரே வாக்குச் சாவடி உள்ள பகுதிக்கு செல்லஅனுமதிக்கப்பட்டனர் என்றார்.
இந்த நிலையில் காலை முதல் மாலை விறுவிறுப்பாக நடந்து வந்த வாக்குப் பதிவுநேற்று மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. இதில் 68.7சதவீத வாக்குகள் பதிவாகின.
பெரிய அளவில் அசம்பாவிதம், வன்முறை எதுவும் இல்லாமல் மதுரை மத்தியதொகுதிக்கான இடைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது மதுரை மக்களிடையே நிம்மதிப்பெருமூச்சை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications