தீவிரவாதத்தை பாக். விரும்பவில்லை: முஷாரப்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்:

தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஒருபோதும் விரும்பியதில்லை. இந்தியா மற்றும் பாகிஸ்தானில் தீவிரவாதநடவடிக்கைளை ஒழிக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட பாகிஸ்தான் தயாராக இருப்பதாக அந்நாட்டுஅதிபர் பர்வேஸ் முஷாரப் கூறியுள்ளார்.

ரம்ஜானையொட்டி இஸ்லாமாபாத்தில் நடந்த இப்தார் விருந்தில் கலந்து கொண்டு பேசிய முஷாரப் இவ்வாறுதெரிவித்தார். முஷாரப் பேசுகையில், இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்து தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளில்ஈடுபட முடியும். இரு நாடுகளிலும் தீவிரவாதத்தை அனுமதிக்க முடியாது.

இந்திய நாடாளுமன்றம் தாக்கப்பட்டபோதும், மும்பை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தின்போதும் அதைபாகிஸ்தான் கடுமையாக கண்டித்தது. மும்பை ரயில் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக இந்தியாவுடன்முழுமையாக ஒத்துழைக்க பாகிஸ்தான் தயாராக உள்ளது.

மும்பை தொடர் குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைக்கு பாகிஸ்தான் முழுமையாக ஒத்துழைக்கும் என நான்ஏற்கனவே அறிவித்திருந்தேன். தற்போது மீண்டும் அதை உறுதியுடன் தெரிவிக்கிறேன். குண்டுவெடிப்புதொடர்பான உறுதியான ஆதாரம் தரப்பட்டால் நிச்சயம் அதை நாங்கள் பரிசீலிப்போம்.

ஹவானாவில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தபோது, அவர் என்னிடம் குண்டுவெடிப்பு தொடர்பானஆதாரம் எதையும் தெரிவிக்கவில்லை. தங்களிடம் ஆதாரம் இருப்பதாக இந்தியா கருதுமானால் அதைதாராளமாக பாகிஸ்தானிடம் தரலாம். நிச்சயம் அதை நாங்கள் பரிசீலிப்போம்.

இரு நாடுகளும் இணைந்து தீவிரவாத தடுப்பு அமைப்பை உருவாக்குவது குறித்து மேலும் விவாதித்து திட்டமிடவேண்டியுள்ளது. தீவிரவாதத் தடுப்பு என்பது ஒரு வழிப் பாதையாக இருக்கக் கூடாது. இரு வழிப் பாதையாகஅது மாற வேண்டும். இரு நாடுகளும் இது தொடர்பாக ஒத்துழைத்து நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.

காஷ்மீர் பிரச்சினைக்கும், சியாச்சின் பிரச்சினைக்கும், சர் கிரீக் பிரச்சினைக்கும் இரு நாடுகளும் நினைத்தால்,அரசியல் தைரியம் இருந்தால் ஒரே நாளில் கூட தீர்வு காண முடியும்.

இரு நாடுகளுக்கும் இடையிலான வெளியுறவு செயலர் மட்டத்திலான பேச்சுவார்த்தையின்போது இந்தவிஷயங்கள் விவாதிக்கப்படும்.

பிரதமர் மன்மோகன் சிங்கை பாகிஸ்தானுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளேன். அதை அவர் ஏற்கனவேஏற்றுக் கொண்டுள்ளார். இந்த பயணம் மிகுந்த பலனுள்ளதாக அமையும் வகையில் ஏற்பாடுகள் அமையும்என்றார் முஷாரப்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+