ஆட்சியில் பங்கு: ரணிலுக்கு ராஜபக்ஷே அழைப்பு!
கொழும்பு:
இலங்கை அமைச்சரவையில் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி சேர வேண்டும் என்று அதிபர்மகிந்தா ராஜபக்ஷே திடீர் அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கை அதிபடீஞூன் அதிகாரப்பூர்வ இல்லத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில்விக்கிரமசிங்கே, அதிபர் ராஜபக்ஷேவை நேற்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு இலங்கையில் பெரும்எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.இனப் பிரச்சினை குறித்து இந்த சந்திப்பின்போது முக்கியமாக விவாதிக்கப்பட்டது. சந்திப்புக்குப் பின்னர் அதிபர்மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி, ஆட்சிப் பொறுப்பில்பங்கேற்க வேண்டும், அமைச்சரவையில் இணைய வேண்டும் என ரணில் விக்கிரமசிங்கேவிடம் அதிபர்ராஜபக்ஷே வலியுறுத்தினார்.
இதன் மூலம் நாட்டை சிறந்த முறையில் வழி நடத்திச் செல்ல முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.பல்வேறு பிரச்சினைகளை தீர்க்க இது சரியான தீர்வாக அமையும் என்றும் ரணிலிடம் ராஜபக்ஷே தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியைப் போல மற்ற எதிர்க்கட்சிகளும் கூட அரசில் சேர அதிபர் விருப்பம் தெரிவித்தார்.மக்களின் நலம் கருதி இந்த நடவடிக்கைக்கு ஐக்கிய தேசிய கட்சி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும்அதிபர் விருப்பம் தெரிவித்தார்.அதேசமயம், இந்த விஷயத்திற்காக எதிர்க்கட்சிகளை கட்டாயப்படுத்தப் போவதில்லை என்பதையும், சுயமாகசிந்தித்து முடிவெடுக்க அவர்களுக்கு உரிமை உள்ளதையும் அதிபர், ரணில் விக்கிரமசிங்கேவிடம் தெரிவித்தார்என்று அதில் கூறப்பட்டிருந்தது.
இலங்கை இனப் பிரச்சினையை எதிர்க்கட்சிகளையும் இணைத்துக் கொண்டு சந்திக்க அதிபர் முடிவுசெய்திருப்பதையே இது உணர்த்துவதாக உள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கை அமைச்சரவையில் தற்போது 30 கேபினட் அமைச்சர்களும், 27 இணை அமைச்சர்களும், 30 துணைஅமைச்சர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.அதிபருடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் ரணில் பேசுகையில்,
ஆறு முக்கியப் பிரச்சினைகள் குறித்து அதிபருடன் விவாதித்தேன். அதில் அரசு எடுக்கும் நடவடிக்கையைப்பொறுத்து அரசுக்கு ஆதரவு தருவது குறித்து பரிசீலிக்கப்படும்.
இருப்பினும் அமைச்சரவையில் சேருவது குறித்து நாங்கள் எந்த முடிவையும் இதுவரை எடுக்கவில்லை என்றார்.
முக்கிய எதிர்க்கட்சியை ஆட்சியில் பங்கேற்குமாறு ராஜபக்ஷே அழைத்திருப்பது இலங்கை அரசியல்வட்டாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications