கோத்ரா: பானர்ஜி கமிஷன் சட்டவிரோதம்!
அகமதாபாத்:
குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் தொடர்பாக மத்திய ரயில்வே துறை நியமித்த பானர்ஜி கமிஷன்சட்டவிரோதமானது என்று குஜராத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2002ம் ஆண்டு கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் ஒரு பெட்டி தீப்பிடித்து எரிந்தது.இதில் 58 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து விசாரிக்க நானாவதி கமிஷன் நியமிக்கப்பட்டது. இந்த நிலையில்,மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்த பின்னர் புதிதாக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி யு.சி. பானர்ஜியைதலைவராகக் கொண்ட கமிஷனை மத்திய ரயில்வே இலாகா அமைத்தது.இந்த கமிஷன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து விபத்தில் சிக்கி உயிர் பிழைத்தவரான நீல்கந்த் பாட்டியா என்பவர்குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், கோத்ரா சம்பவம் தொடர்பாக ஏற்கனவேநானாவதி ஷா கமிஷன் விசாரித்து வருகிறது. இந்த நிலையில் பானர்ஜி கமிஷன் விசாரணை தேவையற்றது.எனவே இதை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, டி.எம்.படேல், பானர்ஜி கமிஷன் சட்டவிரோதமானது, செல்லாது.இந்த கமிஷன் தாக்கல் செய்யும் அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கக் கூடாது.
ரயில்வே அமைச்சகத்தின் நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியவை. இதுபோல ஒரு கமிஷனை நியமிக்கும்அதிகாரம் ரயில்வே இலாகாவுக்கு இல்லை. இந்திய ரயில்வே சட்டத்தின் பல பிரிவுகளை மீறியதாக இந்த செயல்உள்ளது.
ரயில்வே விபத்து விதிறைகளின்படி விசாரணை நடத்தப்பட்டாலும் கூட அது பரம ரகசியமாக வைக்கப்படவேண்டும் என்றுதான் இந்திய ரயில்வே சட்டம் கூறுகிறது. ஆனால் இந்த விஷயத்தில் அது பகிரங்கமாகமீறப்பட்டுள்ளது. பானர்ஜி கமிஷனின் இடைக்கால அறிக்கை விவரங்கள் பகிரங்கமாக வெளியிடப்பட்டுள்ளன.அதுவும் பீகாரில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுதற்கு 2 நாட்களுக்கு முன்பு வெளியாகியுள்ளது என்று நீதிபதிதனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
குஜராத் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு குறித்து நீதிபதி பானர்ஜி கருத்து தெரிவிக்கையில், நான் எனது கடமையைசெய்துள்ளேன். அதுபோல அவர்கள் (குஜராத் உயர்நீதிமன்றம்) அவர்களது கடமையை செய்துள்ளனர். இதில்வியப்பு ஏதும் இல்லை என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications