தேர்தல் கலாட்டா: பீதியில் பெண் ஊழியர்கள்!
சென்னை:
சென்னை மாநகராட்சிக்கு நடந்த வாக்குப் பதிவின்போது நடந்த வன்ணிறைச் சம்பவத்தாதல் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஊழியர்கள் பெரும் பீதியடைந்துள்ளனர்.
நேற்று நடந்த ணிதல் கட்ட உள்ளாட்சித் தேர்தலின் ஒரு பகுதியாக சென்னை மாநகராட்சியின் 155 வார்டுகளுக்கும் நேற்று வாக்குப் பதிவு நடந்தது. காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. ஆனால் ஒரிரு மணி நேரங்களிலேயே அமைதியாக நடந்து வந்த வாக்குப் பதிவு வன்ணிறையாக மாறியது.ஏகப்பட்ட டாடா சுமோக்கள், குவாலிஸ் போன்ற கார்களில் வந்த ரவுடிக் கும்பல் ஒவ்வொரு வாக்குச் சாவடியாக புகுந்து வன்ணிறை மற்றும் கள்ள ஓட்டுப் போடுவதில் இறங்கியது.
ஏற்கனவே திட்டமிட்டு வைத்திருந்தது போல டக் டக் கென அவர்கள் கள்ள ஓட்டுக்கைளப் போட்டு விட்டு வாக்குச் சாவடிகளுக்கு மாறி மாறிப் போனது பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது.
கள்ள ஓட்டுப் போடுவதை தடுக்க ணியன்ற தேர்தல் பணியாளர்களை பயங்கர ஆயுதங்களைக் காட்டி அக்கும்பல் மிரட்டியது. இந்தக் கும்பலை தடுக்க போலீஸார் ஒரு ணியற்சியும் எடுக்கவில்லை என்று வாக்களிக்க காத்திருந்து கடைசியில் வெறும் கையோடு திரும்பிய வாக்காளர்கள் பலர் குணிறலுடன் தெரிவித்தனர்.
நேற்று நடந்த தேர்தலில் 45 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் இதில் பாதிக்கும் மேல் கள்ள ஓட்டாகத்தான் இருக்கும் என கூறப்படுகிறது. காரணம் அப்பாவி வாக்காளர்கள் பெரும்பாலானோர் நேற்று வாக்களிக்கவே ணிடியவில்லை.
இந்த ரவுடிக் கும்பலின் மிரட்டல் மற்றும் தாக்குதலால் வாக்களிக்க வந்த பலரும் குறிப்பாக பெண்களும் வீடுகளுக்குத் திரும்பி விட்டனர். வாக்களிக்க மிகவும் ஆர்வத்துடன் இருந்தும் அவர்களால் வாக்களிக்க ணிடியாமல் போனது.
இதேபோல இந்த கும்பலின் வன்ணிறை வெறியாட்டத்தால் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஊழியர்கள் மன ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டனர். போலீஸார் எந்தவித தலையீடும் இல்லாமல் அமைதியாகி விட்ட நிலையில் இக்கும்பலை எதிர்த்துப் பேச அவர்கள் ணின்வரவில்லை.
பல வாக்குச் சாவடிகளில், வாக்குப் பெட்டிகளை எடுத்துக் கொண்டு போன சம்பவங்களும் நடந்தன. அவற்றை கும்பலில் இருந்தவர்கள் எரித்து தீக்கிரையாக்கி விட்டனர். இதேபோல தேர்தல் ஆவணங்கள், வாக்குச் சீட்டுக்கள் போன்றவையும் பல இடங்களில் சூறையாடப்பட்டன.
எதற்கும் அஞ்சாத ரவுடிகள் போல அந்தக் கும்பலில் இடம் பெற்றிருந்தவர்கள் இருந்ததால் உயிரைக் கையில் பிடித்தபடி பெண் ஊழியர்கள் பணியாற்ற நேரிட்டது. இதனால் மன ரீதியாக அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இப்படிப்பட்ட நிலையில் எங்களால் இனிமேல் தேர்தல் பணியாற்ற ணிடியாது. எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும். உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை நிலவுகிறது. எதற்கும் அஞ்சாத ரவுடிக் கும்பல் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைக் காட்டி பயணிறுத்தும் நிலையில் என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் உள்ளோம் என அவர்கள் தங்களது மேலதிகாரிகளுக்கு மனுக்களை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நாளை நடைபெறவுள்ள 2ம் கட்ட வாக்குப் பதிவுக்கான தேர்தல் பணியில் ஈடுபட பல பெண் ஊழியர்கள் பெரும் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. அவர்களை தேர்தல் பணிக்குச் செல்ல வேண்டாம் என அவர்களின் குடும்பத்தினரும் வலியுறுத்துவதாக தெரிகிறது.
மொத்தத்தில் அமைதியாக நடந்திருக்க வேண்டிய சென்னை மாநகராட்சி தேர்தல் வன்ணிறைக் கும்பலின் வெறியாட்டத்தால் பெரும் கேலிக்கூத்தாக மாறிப் போய் விட்டது என்பதுதான் சென்னை நகர மக்களின் பொதுவான கருத்தாக உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications