கும்மிடிப்பூண்டி: போலீஸ் ஜீப் எரிப்பு-தடியடி
திருவள்ளூர்:
கும்மிடிப்பூண்டி அருகே மறு தேர்தல் கோரி நள்ளிரவில் ஏராளமானோர் திரண்டு மறியல் போராட்டத்தில்குதித்தனர். அப்போது போலீஸ் ஜீப் தீ வைத்து எரிக்கப்பட்டது.
இதையடுத்து போலீஸார் தடியடி, கண்ணீர் புகை குண்டுகளை பிரயோகித்து கூட்டத்தை கலைத்தனர்.திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பெரிய ஓபுளாபுரம் கிராமத்தில் உள்ள 77வது எண் வாக்குச்சாவடியில், மொத்தம் 880 ஓட்டுக்கள் உள்ளன. நேற்று மாலை வாக்குப் பதிவு நடந்து கொண்டிருந்தபோதுதிடீரென ஒரு கும்பல் உள்ளே புகுந்து அங்கிருந்த தேர்தல் பணியாளர்களை மிரட்டி உள்ளே வைத்துப் பூட்டினர்.
பின்னர் வாக்குச் சீட்டுக்களைக் கைப்பற்றிய அவர்கள் சரமாரியாக தங்களது விருப்ப சின்னத்தில் முத்திரைகுத்தினர். பின்னர் உள்ளே சென்ற அவர்கள் தேர்தல் அதிகாரி நித்யானந்தத்திடம் கையெழுத்துப் போடுமாறுமிரட்டினர். அவர் மறுக்கவே, தேர்தல் ஆவணங்கள், வாக்குச் சீட்டுக்களை கிழித்துப் போட்டு விட்டு சென்றனர்.
இந்த சம்பவத்தைக் கண்டித்து 500க்கும் மேற்பட்ட கிராமத்தினர் ஒன்று கூடி சாலை மறியலில் இறங்கினர்.இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து அவர்களை சமாதானப்படுத்தினர். இவ்வளவு களேபரம் நடந்துகொண்டிருந்தபோதிலும், ஒரு நபர் வாக்குச் சாவடிக்குள் புகுந்து ஒரு வாக்குச் சீட்டுக் கட்டை எடுத்து அதில் தனதுவிருப்ப சின்னத்திற்கு முத்திரை குத்தி உள்ளே போட்டு விட்டுச் சென்றதால் பொதுமக்கள் கடும்ஆத்திரமடைந்தனர்.
பதட்டமான சூழ்நிலையில், இரு வாக்குச் சாவடிகளில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று மக்கள்கோஷமிட்டனர். சிறிது நேர போராட்டத்திற்குப் பின்னர் கூட்டம் கலைந்து சென்றது. ஆனால் இரவு 8மணியளவில் மீண்டும் அனைவரும் கூடி போராட்டத்தில் குதித்தனர்.
800க்கும் மேற்பட்டோர், கூடி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து எஸ்.பி. ராஜேந்திரன் உள்ளிட்டோர்வந்து அவர்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் மறு தேர்தல் நடத்தியே ஆகவேண்டும் என்று பொதுமக்கள் திட்டவட்டமாக கூறி விட்டனர்.
உதவி ஆட்சியர் சங்கீதா மக்களின் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும் என உறுதி கூறியும் யாரும்கலையவில்லை. போராட்டம் நள்ளிரவு வரை நீண்டது. இந்த சமமயத்தில், மேலும் நூற்றுக்கணக்கானகிராமத்தினர் ஒன்று கூடவே அங்கு பரபரப்பு அதிகமானது.
அப்போது ஒரு கும்பல் போலீஸ் ஜீப் ஒன்றை தீவைத்துக் கொளுத்தியது. இதனால் அங்கு பெரும் பதட்டம்ஏற்பட்டது. போலீஸார் மீது கல்வீச்சும், சோடா பாட்டில்களும் வீசப்பட்டன. இதையடுத்து போலீஸார் தடியடிநடத்தியும், கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தைக் கலைத்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications