ஐ.நா. பொதுச் செயலராக பான் கி மூன் தேர்வு
நியூயார்க்:
ஐ.நா. சபையின் 8வது பொதுச் செயலாளராக தென் கொரிய வெளியுறவு அமைச்சர் பான் கி மூன் முறைப்படிதேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஐ.நா. பொதுச் செயலாளர் கோபி அன்னானின் பதவிக்காலம் வருகிற டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைகிறது.இதையடுத்து புதிய பொதுச் செயலாளருக்கான தேர்தல் நடைமுறைகள் தொடங்கின. பான் கி மூன், இந்தியாவின்சசி தரூர் உள்ளிட்ட 9 பேர் களத்தில் நின்றனர்.ஆனால் பான் கி மூனுக்கே தொடர்ந்து அதிக ஆதரவு இருந்ததால் சசி தரூர் போட்டியிலிருந்து விலகினார்.இதேபோல இலங்கை வேட்பாளர் தனபாலாவும் போட்டியிலிருந்து விலகினார். இதையடுத்து பான் கி மூன்வெற்றி உறுதியானது.
பான் கி மூனின் பெயரை பொதுச் செயலாளர் பதவிக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பொதுச் சபைக்கு பரிந்துரைசெய்தது. இதையடுத்து நேற்று பான் கி மூனை புதிய பொதுச் செயலாளராக தேர்வு செய்வதற்கான தீர்மானத்தைபொதுச் சபை தலைவர் ஷேக் ரஷீத் அல் கலிபா கொண்டு வந்தார்.
இதை உறுப்பினர்கள் கைதட்டி வரவேற்றனர். இதையடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதையடுத்து கோபிஅன்னான், பான் கி மூனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
தொடர்ந்து அன்னான் பேசுகையில், அனைத்து நாடுகளுடனும் ஒருங்கிணைந்து செயல்படக் கூடியவர் பான் கிமூன். உலகளாவிய கண்ணோட்டத்துடன், நேர்மையாக செயல்படக் கூடியவர் என்று பாராட்டு தெரிவித்தார்.ஜனவரி 1ம் தேதி பான் கி மூன் ஐ.நா. பொதுச் செயலாளராக பொறுப்பேற்கிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications