2-வது கட்ட உள்ளாட்சி தேர்தல்: 65 % பதிவு
சென்னை:
தமிழகத்தில் இன்று நடந்த 2வது கட்ட உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவு ஆங்காங்கே சில வன்முறைச் சம்பவங்களுடன் நடந்து முடிந்தது. 60 முதல் 65 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 67,000 பதவியிடங்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் கட்ட வாக்குப் பதிவு நடந்தது. இந்த தேர்தலில் 72 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த நிலையில் இன்று 2வது கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது.132 மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள், 1913 நகராட்சி வார்டு உறுப்பினர்கள், 525 மூன்றாம் நிலை நகராட்சி உறுப்பினர்கள், 4376 பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், 316 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 3160 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 6061 ஊராட்சி மன்றத் தலைவர்கள், 46, 719 ஊராட்சி மன்ற கத வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 63,000 உள்ளாட்சி பதவியிடங்களுக்கு இன்று தேர்தல் நடந்தது.
மதுரை மற்றும் திருச்சி மாநகராட்சிகளிலும் இன்று வாக்குப் பதிவு நடந்தது. சென்னை மாநகராட்சி தேர்தலில் பெரும் வன்முறை மூண்டதால், இன்றைய தேர்தலில் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டிருந்தது.
தமிழகம் முழுவதும் பொதுவாக அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடந்தது. நகர்ப்புறப் பகுதிகளை விட ஊராட்சிப் பகுதிகளில்தான் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடந்தது.
சென்னை புறநகர் நகராட்சிகள், மதுரை மற்றும் திருச்சி மாநகராட்சி உள்ளிட்ட இடங்களில் முதல் கட்ட வாக்குப் பதிவைப் போல வாக்குச் சீட்டுக்கள் பறிப்பு, கள்ள ஓட்டு, வாக்குப் பெட்டிகள் பறிப்பு உள்ளிட்டவை நடந்தன.
மற்றபடி பெரிய அளவிலான வன்முறை ஏதும் நடைபெறவில்லை. தேர்தல் நடந்த அனைத்து இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த நிலையில், மாலை 5 மணிக்கு வாக்குப் பதிவு முடிவடைந்தது.
வாக்குப் பதிவு முடிந்ததும் 866 வாக்கு எண்ணும் மையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டன. ஓட்டு எண்ணிக்கை 18ம் தேதி காலை தொடங்குகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications