மறு வாக்குப் பதிவிலும் சரமாரி கள்ள ஓட்டு!
சென்னை:
சென்னை மாநகராட்சியின் 17 வாக்குச் சாவடிகளில் இன்று நடைபெறும் மறு வாக்குப்பதிவிலும் சரமாரியாக கள்ள ஓட்டுப் போடப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
சென்னை மாநகராட்சியில் வியாசர்பாடி, புளியந்தோப்பு, ராஜா அண்ணாமலைபுரம்,யானைகவுணி பகுதிகளில் உள்ள 17 வாக்குச் சாவடிகளில் வன்முறை நடந்ததால்இன்று மறு வாக்குப் பதிவுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.இங்கு இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப் பதிவு தொடங்கியது. அதிமுக கூட்டணி இந்தமறு வாக்குப் பதிவை புறக்கணித்ததால், அதிமுக, மதிமுக வேட்பாளர்கள், பூத்ஏஜென்டுகள் யாரும் வாக்குச் சாவடிக்கு வரவில்லை.
திமுக மற்றும் சுயேச்சை வேட்பாளர்களின் பூத் ஏஜென்டுகள் மட்டுமே வந்திருந்தனர்.இங்கு கூடுதல் போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.வியாசர்பாடி தேவதாஸ் நடுநலைப்பள்ளியில், 6 வாக்குச் சாவடிகள்அமைக்கப்பட்டிருந்தன. மொத்தம் 7016 வாக்காளர்கள் இங்கு உள்ளனர். ஆனால்காலை 9 மணி வரை வாக்காளர் யாருமே வரவில்லை.
இதைப் பயன்படுத்திக் கொண்ட ஒரு கும்பல் வாக்குச் சாவடிகளுக்குள் புகுந்துதங்களது இஷ்டத்திற்கு வேண்டப்பட்ட சின்னத்தில் சரமாரியாக முத்திரை குத்தி கள்ளஓட்டுக்களைப் போட்டுக் குவித்தனர்.
ஆளுக்கு 10 சீட்டு, 15 சீட்டு என்று எடுத்துக் கொண்டு நிதானமாக முத்திரைகுத்தியதைப் பார்க்க முடிந்தது. தனித்தனியாக அவர்கள் வந்து கள்ள ஓட்டுப்போட்டனர்.
சரமாரியாக கள்ள ஓட்டுப் போடப் படுவதைப் பார்த்தும் தேர்தல் பணியாளர்களும்,காவல்துறையினரும் எதுவும் பேசவில்லை. அவர்களைத் தடுத்து நிறுத்தவும் இல்லை.
ஒரு வாலிபரைப் பார்த்து போட்டது போதும்ப்பா, போப்பா என்று போலீஸ்காரர்ஒருவர் கெஞ்சிக் கூத்தாடி வெளியே அனுப்பியதையும் பார்க்க முடிந்தது.மறு வாக்குப் பதிவிலும் சரமாரியாக கள்ள ஓட்டு போடப்பட்டதைப் பார்த்தவாக்காளர்கள் வெறுத்துப் போய் ஓட்டுப் போடாமல் திரும்பிச் சென்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications