ஊக்க மருந்து: சிக்கினார் சோயப் அக்தார்!
ஜெய்ப்பூர்
தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை சாப்பிட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சோயப் அக்தார் மற்றும்முகம்மது ஆசிப் ஆகிய இருவரும் சிக்கியுள்ளனர். இதையடுத்து இருவரையும் உடனடியாக நாடு திரும்புமாறுபாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
மினி உலகக் கோப்பை என அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி போட்டி இந்தியாவில் தொடங்கியுள்ளது.இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட முன்னணி நாடுகளின் அணிகள் இதில் கலந்து கொண்டுள்ளன.அனைத்து வீரர்களுக்கும் ஊக்க மருந்து சோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தான்வீரர்களுக்கு நடத்தப்பட்ட ஊக்க மருந்து சோதனையில், வேகப் பந்து வீச்சாளர்கள் அக்தார் மற்றும் ஆசிப் ஆகியஇருவரும் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியிருப்பது தெரிய வந்தது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்திய சோதனையில் இது தெரிய வந்துள்ளது. இதையடுத்து இருவீரர்களையும் உடனடியாக நாடு திரும்புமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், வீரர்களிடம் எடுக்கப்பட்ட சிறுநீர் மாதிரியை சிட்னி மற்றும்கோலாலம்பூருக்கு சோதனைக்காக அனுப்பினோம். அதில் அக்தார் மற்றும் ஆசிப் ஆகிய இருவரும் தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்தை உட்கொண்டது தெரிய வந்தது.
இதையடுத்து இரு வீரர்களையும் உடனடியாக நாடு திரும்புமாறு உத்தரவிட்டுள்ளோம் என்றார்.
பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர்கள் இருவர் ஊக்க மருந்து உட்கொண்டதாக வெளியாகியுள்ள தகவல்கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications