அதிமுக மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்: திமுக
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலில் தாங்கள் செய்த வன்முறையை மறைக்கவே அதிமுக வழக்கு தொடர்ந்துள்ளது.அக்கட்சியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக தாக்கல்செய்துள்ள பதில் மனுவில் தெரிவித்துள்ளது.
சென்னை மாநிகராட்சிக்கு கடந்த 13ம் தேதி நடந்த முதல் கட்ட வாக்குப் பதிவின்போது பெரும் வன்முறைநடந்தது. 155 வார்டுகளிலும் வன்முறைக் கும்பல் பெரும் அராஜகத்தில் இறங்கியதால் வாக்குப் பதிவு பெருமளவுபாதிக்கப்பட்டது.இந்த வன்முறைக்கு திமுகவினரும், அவர்கள் தூண்டி விட்ட குண்டர்களும்தான் காரணம். எனவே சென்னைமாநகராட்சி தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள், இதுகுறித்து பதில் மனு தாக்கல் செய்யுமாறு திமுக, தேர்தல்ஆணையம் உள்ளிட்டவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இதற்கு திமுக பதில் அளித்து மனு தாக்கல் செய்துள்ளது. திமுக சார்பில் பொதுச் செயலாளர் அன்பழகன்அளித்துள்ள பதிலில், தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளை ரிட் மனுக்கள் மூலம் எதிர்கொள்ள முடியாது.அதிமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை அக்கட்சியின் பொதுச் செயலாளர் தாக்கல் செய்யவில்லை.
அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் சார்பாக தனி நபர் யாரும் மனு தாக்கல் செய்ய முடியாது. மேலும் இந்த மனுவில்எந்தவித பொது நலனும் இல்லை. தேர்தல் நடத்தப்பட்டு விட்ட நிலையில் அதை ரத்து செய்யக் கோரி ரிட் மனுமூலம் வழக்கு போட முடியாது.
கடந்த 2001ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தலின்போது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.கள்ள ஓட்டுப் போட அனைத்து ஏற்பாடுகளையும் செய்யமாறு கட்சித் தலைமை அமைச்சர்களுக்கும்,எம்.எல்.ஏக்களுக்கும் உத்தரவிட்டது.
அதேபோல 2005 நடந்த வார்டு இடைத் தேர்தல்களிலும் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. தற்போதுநீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் வாக்குச் சீட்டுக்களை கைப்பற்றி உதயசூரியன்சின்னத்தில் முத்திரை குத்தியுள்ளனர்.
மாநகராட்சித் தேர்தலில் காலை 9 மணிக்கு ஓட்டுப் போட்ட ஜெயலலிதா, தேர்தலில் வன்முறைச் சம்பவங்கள்நடப்பதாக அறிக்கை விட்டார். தேர்தலில் வன்முறை நடந்து விட்டதாகக் கூறி அதை வைத்து உயர்நீதிமன்றத்தில்அன்றைய தினம் மதியமே அவசர மனு ஒன்றை தாக்கல் செய்து விடலாம் என ஜெயலலிதாவிடம் காலை 9.30மணிக்கு சுமார் 40 வக்கீல்களும், ஏராளமான அதிமுகவினரும் சென்று அனுமதி கேட்டதாக கூறுகிறார்கள்.
ஆனால் அவர்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், மதியம் 12 மணியளவில் வன்முறைச்சம்பவங்கள் நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இந்த ரிட் மனுவே ஏற்கனவே தயாரிக்கப்பட்டஒன்றுதான்.
தேர்தலில் வன்முறை நிகழ்த்த வேண்டும் என்பதற்காக சிறையிலிருந்த ரவுடிகளை பரோலில் வெளியேவிடுவித்துள்ளதாக கூறப்படுவது தவறான தகவல். இது அவதூறான தகவல் என்பதால் உயர்நீதிமன்றம்தானாகவே முன்வந்து இதை அவமதிப்பு வழக்காக எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதிமுகவினர்தான் இந்த வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். அதை மறைக்கவே இந்த வழக்கு.அவர்கள் நடத்திய தாக்குதலில் திமுகவினர் பலர் காயமடைந்துள்ளனர்.
இந்த ரிட் மனு விசாரணைக்கு உகந்ததல்ல. எனவே இதை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்அன்பழகன்.
இதேபோல தேர்தல் ஆணையம், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சார்பிலும் பதில் மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் கோபாத்யா, இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர்முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications