பஸ் தொழிலாளர்களுக்கு 21% போனஸ்?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு தீபாவளிக்கு 21 சதவீத போனஸ் வழங்கப்படும் எனத்தெரிகிறது.

தீபாவளியையொட்டி போக்குவரத்துத் தொழிலாளர்கள், ஆவின், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகதொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம்.

கடந்த ஆண்டு 8.33 சதவீத போனஸ் தரப்பட்டது. இந்த ஆண்டு 24 சதவீத போனஸ் தரப்பட வேண்டும் என்றுஅரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் கோரியுள்ளனர்.

இதுதொடர்பாக போக்குவரத்துக் கழக தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.அரசுத் தரப்பில் 20 சதவீதம் வரை போனஸ் தர தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை இறுதிக் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அப்போது ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனத்தெரிகிறது. அதில் 20.5 அல்லது 21 சதவீத போனஸ் வழங்குவது தொடர்பாக முடிவு செய்யப்படும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பான அறிவிப்பு இன்று இரவுக்குள் வெளியாகும் என்று தெரிகிறது. இதேபால மின் வாரியம், ஆவின்,நுகர்பொருள் வாணிப் கழக ஊழியர்களுக்கும் இதே அளவிலான போனஸ் வழங்கப்படும் எனத் தெரிகிறது.இதற்கான அறிவிப்புகள் ஓரிரு நாளில் வெளியாகக் கூடும்.

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 1.25 லட்சம் ஊழியர்கள் உள்ளனர். மின்வாரியத்தில் 1 லட்சம்தொழிலாளர்கள் உள்ளனர். நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 20,000 பேர் உள்ளனர். மொத்தத்தில் 4 லட்சம்ஊழியர்களுக்கு போனஸ் பலன் கிடைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+