மதுரை: நாளை வாக்கு எண்ணிக்கை
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை மத்திய தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாளை காலைதொடங்குகிறது.
அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜனின் திடீர் மறைவைத் தொடர்ந்து மதுரை மத்திய தொகுதிக்கு இடைத்தர்தல் நடத்த வேண்டி நிலை ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 11ம் தேதி இடைத் தேர்தல் நடந்தது.இதில் திமுக சார்பில் கெளஸ் பாட்ஷாவும், அதிமுக சார்பில் ராஜன் செல்லப்பாவும், தேமுதிக சார்பில் பன்னீர்செல்வம் போட்டியிட்டுள்ளனர். இவர்கள் தவிர 16 சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.
இத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாளை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. மதுரைமருத்துவக் கல்லூரி வளாகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
மின்னணு வாக்குப் பதிவு என்பதால் பிற்பகலுக்குள் முடிவு தெரிந்து விடும் என தேர்தல் ஆணைய தகவல்தெரிவிக்கிறது. வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பலத்த பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications