முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு வலைவீச்சு!
சென்னை:
ஆலந்தூர் சட்டசபைத் தொகுதிக்குட்பட்ட பழவந்தாங்கல் பகுதியில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பெட்ரோல்குண்டுகளை பயன்படுத்தி கலவரம் செய்ய முயன்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதியையும்போலீஸார் கைது செய்யத் திட்டமிட்டுள்ளனர். தலைமறைவாகி விட்ட வளர்மதியைப் பிடிக்க தனிப்படைஅமைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று உள்ளாட்சித் தேர்தலில் 2வது கட்ட வாக்குப் பதிவு நடந்தபோது, கிண்டி கத்திப்பாராசந்திப்பில் போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது ஒரு வேனை மடக்கி சோதனையிட்டபோது 5 பெட்ரோல் குண்டுகள், பயங்கர ஆயுதங்களுடன் 16பேர் வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அனைவரையும் போலீஸார் கைது செய்தனர்.
போலீஸார் நடத்திய விசாரணையின்போது, சேகர்பாபுதான் பெட்ரோல் குண்டுகளை தங்களுக்கு வழங்கி அனுப்பிவைத்ததாகவும், பழவந்தாங்கல் நகராட்சித் தேர்தலில் குழப்பம் ஏற்படுத்தவே தாங்கள் போய்க்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.
மேலும், முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி கேட்டுக் கொண்டதன் பேரில்தான் சேகர்பாபு தங்களை ஏற்பாடுசெய்து அனுப்பி வைத்ததாகவும் அவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீஸார் நேற்றுநள்ளிரவில் சேகர்பாபுவைக் கைது செய்தனர். இருப்பினும் நெஞ்சு வலி என்று கூறி சேகர்பாபு ஏற்கனவேமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததால் அவரை மீண்டும் மருத்துவமனைக்கே போலீஸார் கொண்டுசென்றனர்.
தற்போது வளர்மதியையும் கைது செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளனர். அவரைப் பிடிக்க தனிப்படைஅமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications