சதாமுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுமா?
பாக்தாத்:
148 ஷியா பிரிவு முஸ்லீம்களை படுகொலை செய்த வழக்கில் சதாம் உசேன் மீது நடந்த வந்த வழக்கில் இன்றுதீர்ப்பு தேதி அறிவிக்கப்படுகிறது.
கடந்த 1982ம் ஆண்டில் ஈராக் அதிபராக இருந்த சதாம் உசேனை கொலை செய்ய முயற்சி நடந்தது. இதற்குஷியா பிரிவு முஸ்லீம்கள் தான் காரணம் என ஆவேசமடைந்த சதாம், துஜைல் என்ற கிராமத்தில் வசித்து வந்த148 ஷியா பிரிவு முஸ்லீம்களை கொல்ல உத்தரவிட்டார் என்று சதாம் மீது தனி நீதிமன்றத்தில் வழக்கதொடரப்பட்டுள்ளது.இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்துள்ளது. சதாமுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என அரசுத் தரப்புவழக்கறிஞர்கள் கோரியுள்ளனர். இந்த வழக்கு தவிர 80ம் ஆண்டுகளில் குர்து இனத்தைச் சேர்ந்தஆயிரக்கணக்கானவர்களை கொலை செய்ததாகவும் சதாம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்துவருகிறது.
ஷியா பிரிவினர் மீதான கொலை வழக்கு விசாரணையின்போது, நான்தான் கொலை செய்ய உத்தரவிட்டேன் எனசதாம் ஒப்புக் கொண்டார். இதை நான் சட்டத்திற்கு உட்பட்டுத்தான் செய்தேன். நாட்டின் அதிபரை கொலை செய்யமுயற்சிப்பவர்களை சும்மா விட முடியுமா எனவும் அவர் ஆவேசமாக கூறியிருந்தார்.
கடந்த ஒருவருடமாக விசாரிக்கப்பட்டு வந்த வழக்கு முடிவடைந்துள்ள நிலையில், தீர்ப்பு தேதியை நீதிபதி ராஃப்அப்துல் ரஹ்மான் இன்று அறிவிக்கவுள்ளார். சதாமுக்கு மரண தண்டனை கிடைக்கும் என்று பரவலாகஎதிர்பார்க்கப்படுவதால் தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாட்சிகள் கொடுத்த வாக்குமூலங்கள், சாட்சியங்களை பரிசீலித்த பின்னர் தீர்ப்பு தேதியை நீதிபதி அறிவிப்பார்எனக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் சதாம் தவிர அவரது ஆட்சியில் முக்கியப் பதவிகளை வகித்த மேலும் 7 பேர்மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது நினைவிருக்கலாம்.
தீர்ப்பு வெளியாக 20 நாட்கள் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈராக் சட்டப்படி, மரண தண்டனை என்பதுதூக்குத் தண்டனையாகும். ஆனால் தனக்கு மரண தண்டனை விதித்தால் தன்னை தூக்கில் போட வேண்டாம்,ராணுவ வீரர்களை வைத்து தன்னை சுட்டுக் கொல்லுமாறு சதாம் நீதிமன்றத்தில் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.
இதற்கிடையே, தனது வழக்கறிஞர் கலீல் துலைமிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் சதாம். சனிக்கிழமை சதாமைதுலைமி சிறையில் சந்தித்தபோது இந்த கடிதத்தை அவர் வழக்கறிஞரிடம் கொடுத்தார்.
அதில், ஈராக் மக்கள் ஒன்றுபட வேண்டும். ஈராக்கை விட்டு அமெரிக்க படைகளை விரட்ட வேண்டும் என்றஎண்ணம் மட்டுமே ஈராக்கியர்களிடம் இருக்க வேண்டும்.
வெற்றி நமது கையில் உள்ளது. ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து நமது நாட்டை விடுவிக்க வேண்டிய கடமைநம்மிடம் உள்ளதை ஈராக்கியர்கள் மறந்து விடக் கூடாது என்று கூறியுள்ளார் சதாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications