கள்ள ஓட்டு போட்டவர் கையில் நறுக்!
சென்னை:
சென்னை அருகே ஆலந்தூர் நகராட்சித் தேர்தலில் கள்ள ஓட்டுப் போட வந்த நபரின் கையில் பெண் வேட்பாளர்நறுக் என கடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஆலந்தூர் நகராட்சிக்குட்பட்ட 2வது வார்டில் நேற்று வாக்குப் பதிவு நடந்தது. வாக்குப் பதிவு முடிய முக்கால் மணிநேரம் இருக்கும் நிலையில், ஒரு கும்பல் உள்ளே புகுந்தது.அதில் ஒரு வாலிபர், தேர்தல் அதிகாரியிடமிருந்த ஓட்டுச் சீட்டுக்களைப் பறித்து கள்ள ஓட்டு போட முயன்றார்.
இதைப் பார்த்ததும் அங்கிருந்த சுயேச்சை வேட்பாளர் ரமணி ஆத்திரமடைந்தார். அந்த வாலிபரை நோக்கிஆவேசத்துடன் ஓடிய ரமணி, ஓட்டுச் சீட்டுக்களைப் பறிக்க முயன்றார். ஆனால் அந்த நபர், ரமணியை தாக்கினார்.இதனால் கோபமடைந்த ரமணி, அந்த வாலிபரின் கையில் வெடுக்கென ஒரு கடி கடித்தார்.
வலி தாங்க முடியாமல் அலறிய அந்த நபர் அங்கிருந்து நகர்ந்தார். ஆனால் மீண்டும் கள்ள ஓட்டுப் போடமுயன்றார். இருப்பினும் ரமணி அந்த நபரை கள்ள ஓட்டுப் போட விடாமல் சுமார் கால் மணி நேரம்போராடினார்.
அப்போது அங்கு போலீஸார் வந்ததும் அந்த கள்ள ஓட்டு நபர் தப்பி விட்டார். கள்ள ஓட்டுப் போட முயன்றநபரை பெண் வேட்பாளர் கடித்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications